விராட், ரோஹித் முதல் சீனா வரை!! 2025ல் விடைபெற்ற விளையாட்டு ஜாம்பவான்கள்..
இன்னும் சில நாட்களில் 2025 ஆம் ஆண்டு முடிவுக்கு வரும் நிலையில், இந்த ஆண்டு விளையாட்டு உலகம் சந்தித்த பல ஓய்வுகள் மனதை உருகவைத்தும் வலியை ஏற்படுத்தியும் இருந்தது. பல ஆண்டுகளாக தங்கள் ராஜ்ஜியட்தை ஆண்ட விளையாட்டு உலகின் ஜாம்பவான்கள் ஒய்வு அறிவித்து ரசிகர்களை கண்ணீரில் மூழ்கடித்தனர். அப்படி 2025ல் ஓய்வுபெற்ற விளையாட்டு ஜாம்பவான்கள் பட்டியலை பார்ப்போம்.

ஹிட் மேன் என்று கிரிக்கெட் ரசிகர்களால் புகழப்பட்டு வரும், இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரோஹித் சர்மா, மே 7 2025ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து நிரந்தரமாக ஓய்வினை அறிவித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.
ரோஹித் கொடுத்த அதிர்ச்சி மறைவதற்குள் 2025 மே 12 ஆம் தேதி கிரிக்கெட்டின் கிங் என்று அழைக்கப்படும் விராட் கோலி டெஸ்ட் போட்டிக்கான ஓய்வை அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார்.

90ஸ் கிட்களின் ஹீரோவாக திகழ்ந்து 23 ஆண்டுகாலம் WWE மல்யுத்த போட்டியில் ஜாம்பவானாக இருந்த ஜான் சீனா, டிசம்பர் 13 2025 அன்று தன்னுடைய கடைசி போட்டியில் ஓய்வினை அறிவித்து உருக வைத்தார்.
டென்னிஸ் உலகின் மாபெரும் ஜாம்பவானாக திகழ்ந்த ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரஃபேல் நடால் 2024ல் தன்னுடைய கடைசி போட்டியில் ஆடியிருந்தாலும் 2025 முழுவதும் அவருக்கான பிரியாவிடை வைபவமாகவே இருந்தது.
இந்திய மகளிர் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த வந்தனா கட்டாரியா, 2025ல் தன்னுடைய ஓய்வினை அறிவித்தார்.
இந்திய டென்னிஸின் ஜாம்பவான் ரோஹன் போபண்ணா நவம்பர் 1 ஆம் தேதி பாரிஸ் மாஸ்டர்ஸ் தொடருடன் தன்னுடைய ஓய்வை அறிவித்தார்.
ஆஸ்திரேலிய அணியின் மேட் மேக்ஸ் என்று அழைக்கப்படும் கெளன் மேக்ஸ்வேல் சாம்பியன்ஸ் டிராபி 2025 உடன் ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்து ஷாக் கொடுத்தார்.
தென்னாப்பிரிக்க அணியின் கிரிரிக்கெட் வீரர் ஹென்ரிக் கிளாசன் 34 வயதில் அனைத்துவித சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்து ஷாக் கொடுத்தார்.
டென்மார்க், ஏசி மிலன் அணியின் தடுப்புச்சுவராக இருந்த சைமன் கியர் ஜனவரி 13ல் தன்னுடைய ஓய்வை அறிவித்தார்.
பிரேசில் நாட்டின் பல வெற்றிகளை படைத்த முக்கிய வீரர் லெஃப்ட்-பேக் மார்செலோ 2025 பிப்ரவரி 6 ஆம் தேதி ஓய்வை அறிவித்தார்.