எவனாது கை வைப்பான்..ஒழுங்கா ட்ரஸ் போடுங்க!! நடிகருக்கு பதிலடி கொடுத்த சின்மயி..
நடிகர் சிவாஜி சர்ச்சை
பிரபல தெலுங்கு நடிகர் சிவாஜி நடிப்பில் உருவாகியுள்ள தண்டோரா படம் நாளை டிசம்பர் 25 ஆம்தேதி ரிலீஸானது. சில நாட்களுக்கு முன் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நடிகர் சிவாஜி பேசிய கருத்துக்கள் சர்ச்சைக்குள்ளாகியது.
பெண்களின் அழகு சேலையில் தான் தெரிகிறது. அங்கங்கள் தெரியும்படி உடைகள் அணிவது பிரச்சனையை வரவழக்கும். ஹீரோயின்கள் கண்டபடி ஆடைகள் அணிந்தால் நீங்கள் தான் பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும்.

என்னை தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம், நீங்கள் எடுத்துக்கொண்டாலும் எனக்கு பிரச்சனை இல்லை. உங்கள் அழகு சேலையில்தானே தவிர அங்கங்கள் தெரியும்படி அணியும் ஆடையில் இல்லை, சுதிரந்திரத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது என்று கூறியிருந்தார்.
இதற்கு பலரும் எதிர்த்து கருத்துக்களை தெர்வித்து வரும் நிலையில், சின்மயி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

கங்கணம், மெட்டி
அதில், அவரே ஜீன்ஸ் மற்றும் ஹூடி அணிகிறார், அவர் வேட்டி மட்டுமே அணிந்து இந்திய கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும், அவருக்கு திருமணமாகி இருந்தால், திருமணமானவர் என்பதை குறிக்கும் கங்கணம், மெட்டி அணிய வேண்டும். இங்கு பெண்கள் நடத்தப்படும் விதம் நம்பமுடியாத ஒன்றாவுள்ளது. உண்மையிலேயே நம்பமுடியவில்லை என்று பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.