அம்மா பிரபல நடிகை..அப்பா பிசினெஸ் மேன்!! 24 வயதில் ரூ. 4600 கோடி சொத்துக்கு வாரிசு...யார்?
ரூ. 4600 கோடி சொத்து
சினிமாவை தாண்டி பல சினிமா பிரபலங்கள் பிசினெஸிலும் ஆதிக்கம் செலுத்துவண்டு. அப்படி வரும் வாரிசுகள் இயல்பாகவே பிரபலமாகிவிடுகிறார்கள். ஆனால் எந்தவித பிரபலமும் இல்லாமல் 24 வயதில் 4600 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதியாக இருந்து ஒரு பணக்கார குடும்பத்தின் வாரிசான பெண் ஒருவர் இருக்கிறார்.
அவர்தான் 2025 ஐபிஎல் ஏலத்தின் போது கவர்ந்த ஜான்வி மேத்தா. கொல்கத்தா அணி நிர்வாகம் சார்பாக ஐபிஎல் ஏலத்தில் ஷாருக்கான் குழந்தைகளான சுஹானா கான் மறும் ஆர்யன் கான் கலந்து கொள்வார்கள். ஆனால் இந்த ஆண்டு ஜான்வி மேத்தா என்ற இளம்ப்பெண் கலந்து கொண்டார். யார் அந்த ஜான்வி மேத்தா என்பதை பார்ப்போம்.
யார் அந்த ஜான்வி மேத்தா
பிரபல நடிகை ஜூஹி சாவ்லா மற்றும் பிசினெஸ்மேன் ஜெய் மேத்தாவின் வாரிசு தான் ஜான்வி மேத்தா. ட்ரீம் அன்லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஜூஹி சாவ்லாவும் அவரது கணவரும் ஆரம்பித்தனர். தற்போது ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட் என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.
ஷாருக்கான் நடிக்கும் பெரும்பாலான படங்கள் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தான் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேத்தா குழுமம் ஷாருக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முக்கிய பங்குதாரராக இருக்கிறார்கள்.
எங்கும் தலைக்காட்டாத ஜான்வி மேத்தா, ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்று பிரபலமாகிவிட்டார். இந்தியாவின் பணக்கார நபர்கள் பட்டியலை ஹூருன் இந்தியா 2024ல் வெளியிட்டதில் 335 பேர் இடம்பெற்றிருந்த இப்பட்டியலில் முதல் 20 இடத்தில் நடிகை ஜூஹி சாவ்லாவின் பெயர் இடம்பெற்றிருக்கிறது. ஜூஹி சாவ்லாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 4600 கோடி என்பதால் அதன் வாரிசா ஜான்வி மேத்தா இருக்கிறார்.