சின்னஞ்சிறு கிளியே எபிசோட் அப்டேட்: உயிருக்கு ஆபத்தான நிலையில் தீபா... உயிரைக் காப்பாற்றிய இந்து!

Serials Tamil TV Serials
By Karthick Raja Nov 04, 2026 07:30 AM GMT
Report

Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘சின்னஞ்சிறு கிளியே’ தொடர், அடுத்தடுத்து வரும் திருப்பங்களால் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் தீபாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. குழந்தையின் கழுத்தில் கொடி சுற்றியிருப்பதால், அம்மாவா, குழந்தையா என இருவரில் ஒருவரைத்தான் காப்பாற்ற முடியும் என்று மருத்துவர்கள் அதிர்ச்சியான தகவலைச் சொல்கின்றனர். இதற்காக ஒப்புதல் படிவத்தில் கையெழுத்திடும்படி கார்த்திக்கிடம் கூறுகின்றனர்.

தீபாவை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று நினைக்கும் கார்த்திக், இந்த முடிவை ஏற்க முடியாமல் கையெழுத்திட மறுக்கிறான். அவனுடைய வேதனையைப் புரிந்துகொண்ட இந்துவும் குடும்பத்தினரும் அவனைச் சமாதானப்படுத்துகின்றனர். வேறு வழியில்லாமல், கண்ணீருடன் கார்த்திக் ஒப்புதல் படிவத்தில் கையெழுத்திடுகிறான்.

இதற்கிடையில், பாஸ்கரனும் சித்ராவும் மருத்துவமனைக்கு வருகின்றனர். அவர்களை விஷ்வாவும் ரகசியமாகப் பின்தொடர்ந்து கண்காணித்து வருகிறான். மறுபக்கம், சித்ராவைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் பாண்டிக்கும் கர்ணாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்போது கிருபா கர்ணாவுக்கு போன் செய்து, சித்ராவுடன் சுற்றிக்கொண்டிருக்கும் நபர் யார் என்று கண்டுபிடித்து அவனைத் தீர்த்துக்கட்ட வேண்டும் என்று ஆவேசமாகச் சொல்கிறார்.

சின்னஞ்சிறு கிளியே எபிசோட் அப்டேட்: உயிருக்கு ஆபத்தான நிலையில் தீபா... உயிரைக் காப்பாற்றிய இந்து! | Chinna Siru Kiliye Serial Today Episode

பிரசவ அறைக்குள் தீபா வலியால் துடித்துக் கொண்டிருக்க, வெளியே இருக்கும் குடும்பத்தினர் என்ன நடக்குமோ என்ற பதற்றத்தில் காத்திருக்கின்றனர். அந்த நேரத்தில், தன்னுடைய அம்மா உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அவரைக் காப்பாற்ற உடனடியாக ரத்தம் தேவைப்படுவதாகவும் ஒருவர் அங்கிருப்பவர்களிடம் உதவி கேட்கிறார்.

ஆனால், யாரும் உதவ முன்வராத நிலையில், தன்னுடைய பிரச்சினைகளையும் மறந்துவிட்டு இந்து தானாகவே முன்வந்து ரத்த தானம் செய்கிறாள். இந்துவின் இந்தச் செயலைப் பார்த்த குடும்பத்தினர் அவளுடைய நல்ல மனதைப் பாராட்டுகின்றனர். ரத்த தானம் முடிந்ததும், அந்த நபரும் இந்துவுக்கு மனதார நன்றி தெரிவிக்கிறார்.

ஒருபுறம் தீபாவுக்கு என்ன ஆகுமோ என்ற பயம், மறுபுறம் குழந்தையின் நிலை என்னவாகுமோ என்ற பதற்றம் என அனைவரும் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில், மருத்துவர்கள் குழந்தையுடன் வெளியே வருகின்றனர்.

தீபா உயிருடன் இருக்கிறாளா என்ற பதற்றத்தில் இருக்கும் கார்த்திக், குழந்தையை வாங்கக்கூட மறுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.