ரெண்டே மாசத்துல இரண்டாவது ரவுண்டா.. ஹனிமூனுக்கு நயன்தாராவை விக்னேஷ் சிவன் எங்க தூக்கிச்சென்றார் தெரியுமா?
தென்னிந்திய சூப்பர் ஸ்டாராகவும் முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. நானும் ரவுடி தான் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது அப்படத்தின் போது காதல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 7ஆண்டுகளாக விக்னேஷ் சிவனை காதலித்து எங்கு சென்றாலும் நயன்தாரா அவருடன் ஜோடியாக தான் சென்று வந்தார். எப்போது திருமணம் நடக்கும் என்று கேட்ட அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் படி கடந்த ஜூன் 9 ஆம் தேதி பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு நயனி அம்மாவை கொச்சியில் சந்தித்தப்பின் தாய்லாந்து ஹனிமூனுக்கு இருவரும் பறந்தனர். ஒருவார காலமாக அங்கு ஹனிமூன் கொண்டாடி நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார் விக்கி.

பின் ஹனிமூன் முடிந்ததும் நயன்தாரா ஜவான் படத்தின் ஷூட்டிங்கிற்கும், விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இயக்க வேலையிலும் பிஸியாக இருந்து வந்தனர். இந்நிலையில் சென்னைக்கு வந்த நயன்தாரா கணவர் ஆசையாக சமைத்த உணவு சாப்பிட்டுள்ளார். உடலுக்கு ஒற்றுக்கொள்ளாததால் வாந்து, மயக்கம் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பியாட் இறுதி நிகழ்ச்சியை முடித்து விட்ட நிலையில் நயன்தாராவை விமானத்தில் கூட்டிக்கொண்டு ஸ்பெயினுக்கு பறந்துள்ளாராம். பல வேலைகளை முடித்து 10 நாட்கள் இருவரும் ஓய்வு எடுக்கவே இந்த ஹனிமூன் பிளானை போட்டுள்ளார்களாம்.

பின் சென்னைக்கு திரும்பியதும் நயன்தாரா ஜாவான் மற்றும் மற்றப் படங்களின் ஷூட்டிங்கையும், விக்னேஷ் சிவன் ஏகே62 படத்தின் கதையிலும் கவனம் செலுத்தப்போகிறார்களாம்.