மனைவி இயக்கிய இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக முதலில் ஸ்ருதி இல்லை? இந்த ஹாட் நடிகையாம்!

dhanush amalapaul aishwarya shrutihaasan 3movie
By Edward Jul 26, 2021 05:56 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் தற்போதைய நிலையில் விருது வாங்கும் படங்களின் கதைகளத்தை வைத்தே நடித்து வருபவர் நடிகர் தனுஷ். ஆரம்பத்தில் இவரெல்லாம் ஒரு நடிகரா என்று கேட்டு கேலி செய்தனர் என்று தனுஷ் பல மேடையில் கூறியிருந்தார். அதை உடைக்கும் வகையில் தற்போது அவரின் உழைப்பு எழுச்சி உச்சத்தை தொட்டு வருகிறது.

அந்தவகையில் தன் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் நடிகர் தனுஷ். அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசனுக்கும் இப்படம் நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. இதையடுத்து தற்போது முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.

இந்நிலையில் 3 படத்தில் முதலில் நடிகை ஸ்ருதிஹாசன் தேர்வு செய்யப்படவில்லையாம். அந்த கதாபாத்திரத்திற்கு நடிகை அமலாபாலை தான் கேட்டுருந்தார்களாம். ஆனால் அமலாபாலின் கால்ஷீட் கிடைக்காத காரணத்தால் நடிகை ஸ்ருதிஹாசன் நடித்து கொடுத்துள்ளார். இதையடுத்து, நடிகர் தனுஷின் விஐபி முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் நடித்து கொடுத்துள்ளார் அமலாபால்.