ராமாயணா படத்தில் நடித்துள்ள சாய் பல்லவியின் சம்பளம்.. விவரம் இதோ

Sai Pallavi Ramayana
By Karthick Raja Nov 08, 2026 04:19 AM GMT
Report

ராமாயணா திரைப்படம் கடந்த 5-ஆம் தேதி வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படத்தில் சீதா கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள நடிகை சாய் பல்லவி, இப்படத்திற்காக வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

சாய் பல்லவி - ராமாயணா

இந்தியாவில் உள்ள திறமையான நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி. இவர் நடிப்பில் இந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வெளியாகியுள்ளது ராமாயணா பாகம் 1. இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவான இப்படத்தில் ரன்பீர் கபூர், யஷ், காஜல் அகர்வால் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ளனர்.

ராமாயணா படத்தில் நடித்துள்ள சாய் பல்லவியின் சம்பளம்.. விவரம் இதோ | Sai Pallavi Remuneration For Ramayana Movie

ரூ. 2000 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 350 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. 3 நாட்களில் ரூ. 350 கோடி வந்துள்ள நிலையில், இறுதி வசூல் கண்டிப்பாக இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

ராமாயணா படத்தில் நடித்துள்ள சாய் பல்லவியின் சம்பளம்.. விவரம் இதோ | Sai Pallavi Remuneration For Ramayana Movie

சம்பளம் 

ஒவ்வொரு பிரம்மாண்ட திரைப்படம் வெளியாகும்போதும், அப்படத்தில் நடித்தவர்களின் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் இணையத்தில் வெளியாகும். அந்த வகையில், ராமாயணா திரைப்படத்தில் சீதா கதாபாத்திரத்தை ஏற்று நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை சாய் பல்லவியின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ராமாயணா பாகம் 1 மற்றும் 2 ஆகிய திரைப்படங்களில் நடிக்க நடிகை சாய் பல்லவி ரூ. 12 கோடி சம்பளம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

ராமாயணா படத்தில் நடித்துள்ள சாய் பல்லவியின் சம்பளம்.. விவரம் இதோ | Sai Pallavi Remuneration For Ramayana Movie

பொறுப்பு துறப்பு: ராமாயணா படத்திற்காக சாய் பல்லவி வாங்கிய சம்பளம் குறித்து இங்கு பதிவிடப்பட்டுள்ள தகவல் இணையத்தில் வெவ்வேறு தளங்களில் கூறப்பட்டதுதானே தவிர, அதிகாரப்பூர்வமான தகவல் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.