3 நிமிஷத்துக்கு 3 கோடி!! 31 வயதில் இத்தனை கோடி சொத்து வைத்திருக்கும் நடிகை ஊர்வசி..
ஊர்வசி ரவுடேலா
மாடலிங் துறையில் இருந்து இந்திய சினிமாவில் டாப் நடிகை உருவெடுத்து வருபவர்களில் ஒருவர் நடிகை ஊர்வசி ரவுடேலா. Miss Diva- Miss Universe India 2015 டைட்டிலை கைப்பற்றிய ஊர்வசி, கன்னட சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி, அதன்பின் இந்தி படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
தமிழ், பெங்காளி, இந்தி, தெலுங்கு, மொழிப்படங்களில் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டு பிரபலமான ஊர்வசி, தமிழில் தி லெஜெண்ட் படத்தில் கதாநாயகியாக நடித்தார். சமீபத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக டக்கு மஹாராஜா படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
சொத்து மதிப்பு
அதிலும் அப்படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட சுமார் ரூ. 3 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் ஊர்வசி ரவுடேலா, 31 வயதினை எட்டியுள்ளார்.
இதுவரை நடித்து சம்பாதித்த ஊர்வசிக்கு ரூ. 236 கோடி சொத்து மதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராமில் 72 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் அவரை ஃபாலோ செய்து வருகிறார்கள்.