TRP ரேட் குறைந்து சாம்ராஜ்ஜியத்தை ஆளும் சன் டிவி!! டாப் 10 சீரியல் எது தெரியுமா?

Sun TV Star Vijay Siragadikka Aasai Singappenne
By Edward Aug 17, 2025 04:46 AM GMT
Report

திரைப்படங்களை மக்கள் மத்தியில் சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களும் ரியாலிட்டி ஷோக்களும் மிகப்பெரிய ஆதரவை பெறும்.

இதில் வீட்டில் இருக்கும் பெரும்பாலானோர் சீரியல்களை பார்க்க அடிமையாகிவிடுவார்கள் சினிமாவின் வெற்றி - தோல்விகளை தீர்மானிக்க பாக்ஸ் ஆபிஸ் எப்படி இருக்கிறதோ அதோபோல் சின்னத்திரை சீரியல்கள் தோல்வி - வெற்றியை பார்க்க டிஆர்பி ரேட்டிங் மிகமுக்கிய பங்கினை பெற்று அதை தீர்மானிக்கிறது.

TRP ரேட் குறைந்து சாம்ராஜ்ஜியத்தை ஆளும் சன் டிவி!! டாப் 10 சீரியல் எது தெரியுமா? | 31 This Week Tamil Serial Top 10 Trp Rating

அந்தவகையில் ஒவ்வொரு வாரமும் சின்னத்திரை சீரியல்களின் டிஆர்பி லிஸ்ட் வெளியாகும். 2025-ம் ஆண்டின் 31வது வார நிலவரப்படி, எந்த சீரியல் டாப்பில் இருக்கிறது என்ற லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது.

டாப் 10 சீரியல்

இதுவரை டாப் 10ல் இடம் பெறாத சின்ன மருமகள் சீரியல் இடம்பெற்றுள்ளது. கடந்த வாரம் 6.24 புள்ளிகளுடன் 11வது இடத்தில் இருந்த மருமகள் சீரியல் 6.68 புள்ளுகளுடன் 10வது இடத்தை பிடித்திருக்கிறது. இதனை அடுத்து 6.71 புள்ளிகள் பெற்று பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 9வது இடத்திற்கு வந்துள்ளது.

8வது இடத்தில் அன்னம் சீரியல். இந்த வாரம் 7.88 புள்ளிகளுடன்அன்னம் சீரியலை முந்தி, சிறகடிக்க ஆசை சிரியல் 5வது இடத்தினை பிடித்துள்ளது. இதனால் அன்னம் சீரியல் 8வது இடத்திற்குள் வந்துள்ளது. 6வது இடத்தில் இருந்த சன் டிவியின் மருமகள் சீரியல் 8.11 புள்ளுகளுடன் 7வது இடத்திற்கு சரிந்தது.

TRP ரேட் குறைந்து சாம்ராஜ்ஜியத்தை ஆளும் சன் டிவி!! டாப் 10 சீரியல் எது தெரியுமா? | 31 This Week Tamil Serial Top 10 Trp Rating

கடந்த வாரங்களாக கடும் சரிவை சந்தித்த விஜய் டிவியின் அய்யனார் துணை சீரியல், 8.12 புள்ளிகளுடன் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சிறக்கடிக்க ஆசை சீரியல் 5வது இடத்திற்கு 8.46 புள்ளிகளுடன் முன்னேறியிருக்கிறது. வழக்கம் போல் டாப் 4ல் இந்த வாரமும் சன் டிவி சீரியல்கள் ஆக்கிரமித்திருந்தாலும் புள்ளி ரேட்டிங்கில் மிகவும் கம்மியாகிவிட்டது.

கடந்த வாரம் 9.02 புள்ளிகள் பெற்ற எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இந்த வாரம் 8.81 புள்ளிகள் பெற்று 4வது இடத்திலும், 9.33 புள்ளிகள் பெற்றிருந்த கயல் சீரியல் இந்த வாரம் 8.88 புள்ளிகள் பெற்று 3வது இடத்திலும் உள்ளது. இந்த வாரம் 9.46 புள்ளிகள் பெற்று மூன்று முடிச்சு சீரியல் 2வது இடத்திலும் 10.18 புள்ளிகள் பெற்று சிங்கப்பெண்ணே சீரியல் முதல் இடத்தினையும் பெற்றுள்ளது.