ஒரே நேரத்தில் 5 கிளாஸில் மது!! 7 தயாரிப்பாளருக்கு டிமிக்கி கொடுத்த நவரச நாயகன்...

Karthik Vijayakanth Gossip Today Actors Tamil Actors
By Edward Nov 05, 2025 12:30 PM GMT
Report

நவரச நாயகன்

இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் அறிமுகமான நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் கார்த்திக். பிரபல நடிகர் முத்துராமனின் மகனான கார்த்திக் வசதியோடு பிறந்தாலும் தன்னுடைய திறமையால் ஒட்டுமொத்த திரைத்துறையையும் தன் பக்கம் ஈர்த்தார். சிறந்த நடிகர் என்ற பெயரை எடுத்தாலும் அதே அளவுக்கு விமர்சனங்களையும் சந்தித்து வந்தார். எப்போது ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரத்தோன்றுகிறதோ, அப்போது தான் வருவார்.

ஒரே நேரத்தில் 5 கிளாஸில் மது!! 7 தயாரிப்பாளருக்கு டிமிக்கி கொடுத்த நவரச நாயகன்... | Director Bharathi Kannan About Actor Karthik

பாரதி கண்ணன்

சமீபத்தில் இயக்குநரும் நடிகருமான பாரதி கண்ணன் அளித்த பேட்டியொன்றில், கார்த்திக்கை சந்தித்து கதை சொல்லப்போனேன். போகும்போதே 5 லட்ச ரூபாய் அட்வான்ஸோடுதான் போனேன், அவர் என்னை பார்த்ததும் பொதுவாக பணத்தை நான் கையில் தொடுவதில்லை, அப்பா ஃபோட்டோவில் வைத்துவிடுங்கள் என்று சொன்னார்.

பின் தனது கழுத்தில் போட்டிருந்த செயினை தொட்டு பார்த்துவிட்டு இந்தப்படம் நன்றாக வரும் என்று சொன்னார். அதன்பின் திங்கட்கிழமைக்கு மேல் ஊட்டியில் இருப்பேன், அங்கு வந்து கதை சொல்லும்படி பணித்தார். அங்கு சென்றவர், இன்னொரு 5 லட்சம் ரூபாய் கிடைக்குமா என்று கேட்க, நான் பணத்தை எடுத்துக்கொண்டு ஊட்டிக்கு சென்றேன்.

ஒரே நேரத்தில் 5 கிளாஸில் மது!! 7 தயாரிப்பாளருக்கு டிமிக்கி கொடுத்த நவரச நாயகன்... | Director Bharathi Kannan About Actor Karthik

அங்கே அவர் தங்கிருந்த இடத்துக்கு சென்றபோது டேபிளில் 5 கிளாஸ்கள் இருந்தன. அத்தனை கோப்பைகளிலும் ஒரே நேரத்தில் மினரல் வாட்டர்(மறைமுகமாக மதுவை சொல்கிறார்) ஊற்றி அடுத்தடுத்து குடித்தார். நான் கதைச்சொன்னேன், கதையை கேட்டுவிட்டு கதையில் ரத்தம் கொட்டுகிறது, கதையை மாற்றலாமே என சொல்லிவிட்டார்.

இதற்கிடையில் தயாரிப்பாளர், கார்த்திக்கை பற்றி விசாரித்துவிட்டு, என்னை தொடர்பு கொண்டு அவர் ஒழுங்காக ஷூட்டிங் வரமாட்டார், நீ பணத்தை வாங்கிவிட்டு வந்துவிடு என்று கூறினார். நானும் அவரிம் தயாரிப்பாளர் மனம் மாறிவிட்டார், காசு உங்களிடம் கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்கிறார் என்று கூறினேன்.

அவரோ, பாரதி இந்த கார்த்திக்கிடம் பணம் வந்தால் திரும்ப வராது என்று இண்டஸ்ட்ரிக்கே தெரியும் என்று சொல்லி சென்றுவிட்டார். இதேபோல் இன்னும் 6 தயாரிபபளர்கள் பணத்தை கொடுத்துள்ளனர்.

பஞ்சாயத்து

இந்த பிரச்சனை நடிகர் சங்க தலைவர் விஜயகாந்திடம் சென்றதும், பணம் கொடுத்த 7 பேர் அமர்ந்திருந்தோம். அப்போது கார்த்திக் பஞ்சாயத்துக்கு கேஷுவலாக வந்து கேப்டனிடம், இன்னைக்கு எல்லாத்தையும் க்ளியர் செய்கிறேன் கேப்டன் என்று சொல்லிவிட்டு தன் உதவியாளரிடம் ஒரு பையை எடுத்து வரச்சொன்னார். பையில் இருந்து பணத்தை எடுப்பார் என்று பார்த்தால் ஒரு வெள்ளை சீட்டை எடுத்து எல்லாருக்கும் தேதி கொடுத்தார்.

7 பேரில் தயாரிப்பாளர் காஜா மைதீனும் ஒருவர். அவர் டென்ஷனாகி சேரை எடுத்தடிக்க பாய்ந்தார். கார்த்திக்கோ கூலாக, பாய் கூல் பாய், நான் பணம் கொடுப்பேன், நீங்கள் என்னிடம் தேதி கேட்டீர்கள், தேதி கொடுக்கிறேன் என கூறினார். இப்படி அவர் தனித்துவமான கேரக்டர், அவர் மிக பெரிய திறமையாளர், ஆனால் அவர் கரியரை அவரேதான் கெடுத்துக்கொண்டார் என்று பாரதி கண்ணன் தெரிவித்துள்ளார்.