32 வயதான நடிகை ஹன்சிகா மோத்வானியா இது!! டிரெண்ட்டாகும் க்யூட் புகைப்படங்கள்..
பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ஒருசில படங்களில் நடித்து பிரபலமாகி தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான Desamuduru என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.
இப்படத்தினை தொடர்ந்து இந்தி, கன்னடம், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த ஹன்சிகா தமிழில் தனுஷின் மாப்பிள்ளை, ஜெயம் ரவியின் எங்கேயும் காதல், விஜய்யின் வேலயுதம் போன்ற படங்களில் நடித்தார்.
அதன்பின் முன்னணி நடிகர்கள் படங்களில் அடுத்துடுத்து நடித்து வந்த ஹன்சிகா, கடந்த 2022ல் சோஹைல் என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் கிட்டத்தட்ட 50 படங்களுக்கும் மேல் நடித்து வருகிறார் ஹன்சிகா.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஹன்சிகா மோத்வானி, கிளாமரில் எடுத்த புகைப்படங்களை திருமணத்திற்கு பின்பும் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்து ஒல்லியாக காணப்படும் ஹன்சிகா, சிகப்பு நிற ஆடையணிந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.