மாமன் மச்சினன் உறவில் எழுந்த விரிசல்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் பரபரப்பு புரோமோ!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இந்த தொடரில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் இருக்கும்.

பரபரப்பு புரோமோ!
அந்த வகையில், வரும் வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடக்கப்போவது குறித்து புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
இதில், தனக்கு தெரியாமல் பழனி புதிதாக 'காந்திமதி ஸ்டோர்ஸ்' மளிகை கடை திறந்து இருப்பதை அறியும் பாண்டியன் கடும் கோபத்துடன் வீட்டிற்கு வந்து கோமதியிடம் கத்துகிறார்.
பின் வீட்டிற்கு வரும் பழனி தனது சூழ்நிலையை எடுத்து கூறுவதற்கு முன், கோமதி தனது தம்பியை திட்டுகிறார்.
இதனை தொடர்ந்து கோபத்தில் இருக்கும் பாண்டியன், இனி உனக்கும் இந்த வீட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறி விடுகிறார். அடுத்து என்ன நடக்க உள்ளது என்ற பரபரப்புடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஒரு எதிர்ப்பார்ப்பை உருவாகியுள்ளது.