40 வயது நடிகையை காதலித்து திருமணம் செய்யும் 38 வயதாகும் சிவகார்த்திகேயன் பட வில்லன்.. விரைவில் திருமணமாம்
marriage
love
lover
vinay
vimala raman
By Kathick
தமிழ் திரையுலகில் தற்போது பட்டையை கிளப்பி வரும் வில்லன்களில் ஒருவர் நடிகர் வினய். இவர் சிவகார்த்திகேயனின் டாக்டர், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களில் வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார்.
நடிகர் வினய் முதன் முதலில் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கி இருந்தாலும், தற்போது வில்லன் கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இந்நிலையில், 38 வயதாகும் நடிகர் வினய்க்கு விரைவில் 40 வயது நடிகையுடன் திருமணம் நடைபெறவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பிரபல நடிகை விமலா ராமும் நடிகர் வினய்யும் காதலித்து வருகிறார்களாம். நடிகை விமலா ராமன் தமிழில் வெளிவந்த ராமன் தேடிய சீதை படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.