காதலில் ரொம்ப நேர்மையாக இருக்கும் 4 ராசிக்கார பெண்கள்!! உங்க காதலி எந்த ராசி..
காதல் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின் இருக்கும் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, எந்தவொரு உறவையும் அர்த்தமுள்ளதாக மாற்றுவது தான் விசுவாசம், நேர்மை. அது மட்டும் அந்த உறவில் இல்லை என்றால் நீடிக்காது. அந்தவகையில், ஜோதிடத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்கள் அவர்களின் நேர்மைக்காக மிகவும் பெயர் பெற்றவர்கள் என்று கூறுவார்கள். இந்த குறிப்பிட்ட ராசிகளில் பிறந்தவர்கள் காதல் உறவுகளில் மிகவும் நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் இருப்பார்கள். அப்படி எந்தெந்த ராசிகளில் பிறந்த பெண்கள் காதலில் மிகவும் நேர்மையாக இருப்பார்கள் என்று பார்ப்போம்.

கடக ராசிக்கார பெண்கள்
சந்திரனால் ஆளப்படும் கடக ராசிக்கார பெண்கள்தான் இதில் முதலிடத்தில் இருக்கிறார்கள். நேர்மையான இதயம், அக்கறை உணர்வு, உணர்ச்சிப்பூர்வமான தொடர்பு, தூய்மையான - உண்மையான பாசம் உள்ளிட்டவைகளை கொண்ட கடக ராசிக்கார பெண்கள் தங்கள் உறவின் முழு இதயத்துடனும் ஆன்மாவுடனும் அர்ப்பணித்து அன்புக்கிரியவர்களாகவும் ஆதரவாளர்களாகவும் இருப்பார்களாம்.
ரிஷபம் ராசிக்கார பெண்கள்
இந்த லிஸ்ட்டில் இரண்டாம் இடத்தில் ரிஷபம் ராசிக்கார பெண்கள் இருக்கிறார்கள். சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசிக்கார பெண்கள், தங்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, விசுவாசத்தில் இருந்து உருவாகும் உறுதியான அன்பை வெளிப்படுத்தி காதலை நேர்மையுடன் வெளிப்படுத்துவார்கள்.

சிம்ம ராசிக்கார பெண்கள்
சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்கார பெண்கள், இணையில்லாத ஆற்றலை போல் நேர்மையுடன் முக்கியத்துவம் அளிப்பார்கள். அன்புக்குரியவர்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்பி, அதற்காக போராடுவார்கள்.
விருச்சிக ராசிக்காரப் பெண்கள்
விருச்சிக ராசிக்காரப் பெண்கள் எப்போதும் மேலோட்டமாக காதலிக்க மாட்டார்கள். ஆழமான, தீவிரமான நேர்மையுடன் அன்பு காட்டிவார்கள். அப்படி காட்டுவதால் தங்கள் உறவுகளின் நுணுக்கங்களை ஆராய்ந்து அவர்களின் தீவிர விருப்பத்தில் பிரதிபலித்து உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படும் போக்கு, நெருக்கம், உண்மையான பிணைப்பை உருவாக்குகுவார்கள்.