விஜய் இடத்தை பிடிக்க போட்டியா? சிவகார்த்திகேயன் கொடுத்த விளக்கம்..பஞ்சாயத்தாகும் பராசக்தி - ஜனநாயகன்..
பராசக்தி - ஜனநாயகன்
தமிழ் சினிமாவில் அதிகமாக பேசப்பட்டுக்கொண்டிருக்கும் விஷயம் தான் நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி படங்கள் பொங்களுக்கு மோத இருப்பதுதான்.
இந்த சூழலில் சிவகார்த்திகேயன் முன்னதாக விஜய் பற்றி பேசிய கருத்துக்கள் மீண்டும் இணையத்தில் பகிரப்பட்டு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதோடு, விஜய், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தி வருகிறது.

சிவகார்த்திகேயன்
மதராஸி படத்தின் ஆடியோ லான்சில் பேசிய சிவகார்த்திகேயன், விஜய் சாரின் பயணத்தை நான் நகலெடுக்க முடியாது. அவருடைய இடத்தை பிடிக்க வருகிறேன் என்பதெல்லாம் தவறான புரிதல், எனக்கென ஒரு பாதை இருக்கிறது. என்னைக்கும் அண்ணன் அண்ணன் தான், தம்பி தம்பி தான் என்று பேசியதை பலரும் பாராட்டினார்.
ஆனால் இப்போது விஜய்யின் கடைசி படம் என கூறப்படும் ஜனநாயகன் படம் வெளியாகும் ஒரே நேரத்தில் சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் திரைக்கு வரயிருப்பது, விஜய் ரசிகர்களை கடும் கோபத்துக்கு ஆளாக்கியுள்ளது.
கடைசி படத்துடன் போட்டுயா? அப்போ சொன்ன மரியாதை எல்லாம் எங்கே போச்சு? என்றும் துப்பாக்கி கையில் கொடுத்ததுக்கு துரோகம் செய்துவிட்டார் சிவகார்த்திகேயன் என்று கண்டபடி விஜய் ரசிகர்கள் தாக்கி பேசி வருகிறார்கள்.

இதற்கு சிவகார்த்திகேயன் ரசிகர்கள், பட வெளியீட்டு தேதி என்பது தயாரிப்பாளர், விநியோகஸ்தர்களின் முடிவு, ஒரு நடிகர் மற்றொரு நடிகருக்காக தன் படத்தை ஒத்திவைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
சிவகார்த்திகேயன் எப்போதும் விஜய்யை மரியாதையுடன் தான் பேசியுள்ளார் என்று பதில் கருத்துக்களை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இதற்கிடையில், விஜய்யின் ஜனநாயகன் படம் ஆந்திரா, கேரளா மாநிலங்களின் ரிலீஸுக்கு சில சிக்கல்கள் ஏற்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.