இந்த 4 ராசிக்காரங்க முதுகில் குத்த யோசிக்கவே மாட்டாங்களாம்!! துரோக பண்றது கைவந்த கலையாம்...

Astrology Numerology
By Edward May 10, 2025 12:30 PM GMT
Report

முதுகில் குத்தும் பழக்கம்

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு கட்டத்தில் துரோகத்திற்கு ஆளாவதுண்டு. அதில் மிகவும் மோசமான விஷயம் என்றால் அது துரோகம் தான். நம் நெருக்கமானவர்கள் கூட இதை செய்துவிடுவார்கள். கூடவே பழகியவரே நமக்கெதிரான துரோகத்தை செய்து துரோகிகளாக மாறிவிடுகிறார்கள். அப்படி தன் சுயநலத்திற்காக அப்படி செய்தாலும் அவர்களின் பிறந்த ராசியும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று ஜோதிடம் கூறுகிறது. அப்படி தன் நலனுக்காக முதுகில் குத்தும் பழக்கம் கோண்ட 4 ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்ப்போம்.

இந்த 4 ராசிக்காரங்க முதுகில் குத்த யோசிக்கவே மாட்டாங்களாம்!! துரோக பண்றது கைவந்த கலையாம்... | 4 Zodiac Signs Who Are The Biggest Backstabbers

4 ராசிக்காரர்கள்

  • மேஷ ராசிக்காரர்கள் உக்கிரமும் உணர்ச்சிவசப்பட கூடியவர்களாக இருப்பார்கள். யோசிக்காமல் செயல்படும் இவர்கள் நிதானமாக இருக்கும்போது அவர்களுக்கு நேர்ந்த ஏமாற்றங்களை நினைவு கூர்வார்கள். நம்பமுடியாத அளவிற்கு உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருக்கலாம், ஆனால் இந்த ஆர்வம் சில நேரங்களில் தவறான குணமாக மாறி துரோகம் செய்ய தூண்டும். அப்படி தங்களை காப்பாற்ற நன்மையை பெற முதுகில் குத்தக்கூட தயங்க மாட்டார்கள்.
  • விருச்சிக ராசிக்காரர்கள் தீவிரமான மற்றும் மர்மமான ப்ளூட்டோவால் ஆளப்படுபவர்கள். ஆழ்ந்த உணர்ச்சிகளுக்கும், நீண்ட காலத்திற்கு வெறுப்புகளை வைத்திருக்கும் திறனுக்கும் பேர் போனவர்கள் விருச்சிக ராசிக்காரர்கள். தங்களுக்கு தவறு இழைக்கப்பட்டதாக உணரும் போது அவர்களின் பிரச்சனையை தீர்க்க ரகசியமான, பழிவாங்கும் செயல்களை செய்யலாம். அவர்களின் விசுவாசம் அசைக்கமுடியாததாக இருந்தாலும் அது அவர்கள் துரோகத்தை உணரும்போது முதுகில் குத்த தயங்கமாட்டார்கள்.

இந்த 4 ராசிக்காரங்க முதுகில் குத்த யோசிக்கவே மாட்டாங்களாம்!! துரோக பண்றது கைவந்த கலையாம்... | 4 Zodiac Signs Who Are The Biggest Backstabbers

  • மிதுன ராசிக்கார்கள் இரட்டை இயல்புடையவர்கள் என்பதால், அவர்கள் சூழலுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் இயல்புக்கு பேர் போனவர்கள். இந்த குணம் நல்லதாக இருந்தாலும் சில சமயம் மோசமாகிவிடும். திறமையான தொடர்பாளர்கள் மற்றும் சூழ்நிலைகளை தங்களுக்கு சாதகமாக்கி கொண்டு அவர்கள் அவசியம் என்று நினைக்கும் போது இலக்குகளை அடைய நெருக்கமானவர்களையே முதுகில் குத்த தயங்கமாட்டார்கள்.
  • மகர ராசிக்காரர்களின் வெற்றி மீதான பேராவை வரும் போது ஒழுக்கமான, பொறுப்பான நபர்களாக இருந்தும் துரோகப்பாதையில் போக துணிவார்கள். தங்கள் சகாக்கள், சக ஊழியர்களின் முதுகில் குத்தி தொழில் ஏணியில் ஏறவோ, தங்கள் குறிக்கோள்களை அடையவோ தயாராக இருப்பார்கள். தங்களின் எதார்த்த, கணக்கிடப்பட்ட அணுகுமுறை அவர்களின் துரோக பாதையை அடைய செய்யும். ஏனென்றால் அவர்கள் பெரும்பாலும் தங்கள் உண்மையன நோக்கங்களை வெற்றி என்ற முகமூடியின் பின் மறைக்கிறார்கள்.