40 வயதை எட்டிய நடிகை வரலட்சுமி சரத்குமார்!! சொத்து மதிப்பு இவ்வளவா?
வரலட்சுமி
போடா போடி படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகினார் சரத்குமார் மகள் வரலட்சுமி. இப்படத்தினை அடுத்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த வரலட்சுமி ஒருக்கட்டத்தில் வில்லி ரொலில் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். கடந்த ஆண்டு திருமணத்தை முடித்த கணவருடன் நேரத்தை செலவிட்டு வந்தார் வரலட்சுமி.
இந்நிலையில் பிரபல ஜீ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் நடுவராக பணியாற்றி வருகிறார். தற்போது 40 வயதை எட்டியுள்ள வரலட்சுமியின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சொத்து மதிப்பு
ஒரு படத்திற்கு 70 லட்சத்திற்கும் மேல் சம்பளமாக பெற்று வரும் வரலட்சுமி மொத்தம் 25 கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கிறாராம். அதுமட்டுமில்லாமல் அவரது கணவர் நிக்கோலாய்க்கு கிட்டத்தட்ட 100 கோடிக்கும் மேல் சொத்து மதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.
ரூ. 125 கோடிக்கு எஜமானியாக திகழ்ந்து வரும் வரலட்சுமி தற்போது சின்னத்திரை நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார்.