44 வயது சீரியல் நடிகை ஸ்ருதிராஜ்!! அஜித் பட பாடலுக்கு இப்படி ஆட்டம் போடுறாங்க..
மலையாளத்தில் அக்ரஜன் என்ற படத்தின் மூலம் அரிமுகமாகி தமிழில் நடிகர் விஜய்யின் மாண்புமிகு மாணவன் படத்தில் முக்கிய ரோலில்நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ருதி ராஜ்.
இப்படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்த தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வந்த ஸ்ருதி, 6 ஆண்டுகள் ஒளிப்பரப்பாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற தென்றல் சீரியலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். இதனை தொடர்ந்து ஆபிஸ், திருமதி செல்வம், அழகு, தாலாட்டு போன்ற சீரியலில் நடித்து வந்தார்.
சமீபத்தில் சன் டிவியின் லட்சுமி சீரியலில் நடித்து வருகிறார். 44 வயதை எட்டியும் இன்னும் திருமணம் செய்யாமல் சிங்கிளாக இருக்கும் ஸ்ருதி ராஜ், இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில பதிவுகளை பகிர்வார்.
தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்தின் Sawadeeka பாடலுக்கு தொடர்ந்து சக நடிகைகளுடன் ரீல்ஸ் செய்து வீடியோவை பகிர்ந்து அசத்தி வருகிறார்.