இதுதான் என் கடைசி படம்..அப்படி செய்யாம இருக்க இதான் காரணம்!! நடிகை சமந்தா ஓப்பன் டாக்..
சமந்தா
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட்டிலும் கால்பதித்து டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. மயோசிடிஸ் நோயின் தாக்கத்தில் இருந்து மீண்டு வரும் நடிகை சமந்தா, பல தொழில்கள் மூலம் சம்பாதித்து வருகிறார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் நடிப்பது பற்றி பேசியுள்ளார். நிறைய படங்களில் நடிப்பது எளிமையானதுதான். ஆனால் இதுதான் என் கடைசி படம் என்று என்னை யோசிக்க வைக்கும் அளவிற்கு படங்களில் நடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
முக்கியமாக அந்த கட்டத்தில் நான் இருப்பதாக உணர்கிறேன். அப்படியான ஒரு தாக்கத்தை சினிமா எனக்கு தரவேண்டும். நான் சொன்னதை நாம் முழுவதும் நம்பவில்லை என்றால் நான் அந்த படங்களில் நடிக்கவேமாட்டேன்.
ஒரு நடிகையாக சவால் நிறைந்த கேரக்டர்களில் நடிக்கவே விரும்புகிறேன், எனக்கு மன நிறைவு தராத படங்களில் எப்போதும் நான் நடிப்பதே கிடையாது என்று சமந்தா கூறியுள்ளார்.