பல நடிகைகளிடம் வழிந்த 45 வயது நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம்!! வைரலாகும் திருமண அழைப்பிதழ்..
இயக்குனரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் மகன்களாக சினிமாவில் பிரபலமாகியவர்கள் வெங்கட் பிரபு, பிரேம்ஜி. இருவரும் தங்களுக்கான ஒரு இடத்தினை பிடித்ததோடு வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் தம்பி பிரேம்ஜியை நடிக்கவும் வைத்துவிடுவார்.
அப்படி மங்காத்தா, மாநாடு போன்ற படங்களை தொடர்ந்து தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தில் முக்கிய ரோலில் நடிக்க வைத்திருக்கிறார் அவரது அண்ணன் வெங்கட் பிரபு. 45 வயதை தாண்டியிருக்கும் பிரேம்ஜி, இன்றுவரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார்.
சரக்கு பார்ட்டி என்று தன்னுடைய நண்பர்களுடன் நாட்களை கழித்தும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து நடிகைகளின் புகைப்படங்களுக்கு ஹார்ட்டின் விட்டும் வருகிறார்.
இந்நிலையில் நடிகர் பிரேம்ஜி அமரனுக்கு வரும் ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார்களாம். இந்து என்பவருடன் ஜூன் 9 ஆம் தேதி இருவருக்கும் திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் நடைபெறவுள்ளது என்று திருமண அழைப்பிதழ் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
இது உண்மை தான் என்று பலரும் கூறி வரும் நிலையில், பிரேம்ஜி அண்ணனுக்கு கல்யாணம் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


