கல்யாண பேச்சுக்கே இடமில்லை!! 5 பேருடன் லிவிங் டு கெதர் வாழ்க்கையை வாழ்ந்த கமல் மகள் ஸ்ருதி ஹாசன்..

Kamal Haasan Shruti Haasan Actress
By Edward Jun 06, 2023 01:00 PM GMT
Report

பின்னணி பாடகியாகவும் நடிகையாகவும் திகழ்ந்து அனைவரையும் ஈர்த்து வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். கமல் ஹாசன் மகளாக அறிமுகமாகிய ஸ்ருதி ஹாசன் சில சர்ச்சைகளிலும் சிக்குவார். அப்பாவை போல் காதலில் விழுந்து சிலருடன் லிவ்விங் வாழ்க்கையையும் வாழ்ந்து வந்தார். அப்படி ஸ்ருதி ஹாசனுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த 5 பிரபலங்கள் யார் தெரியுமா?

மைக்கேல் கோர்சேல்

ஸ்ருதி ஹாசன் வளர்ந்து வரும் காலக்கட்டத்தில் லண்டனை சேர்ந்த மைக்கேல் கோர்சேல் என்பவருடன் காதலில் இருந்தார். அவருடன் பொது இடங்களில் குடும்பத்துடன் பங்கேற்றார். அதன்பின் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற நிலையில் இருக்கும் போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டார் ஸ்ருதி.

ரன்பீர் கபூர்

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் விளம்பர படங்களில் நடித்தபோது அவருடன் நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார் என்ற செய்தி வெளியான சில மாதங்களில் அந்த உறவை முறித்துக்கொண்டார்.

சித்தார்த்

பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகர் சித்தார்த்துடன் சில படங்களில் நடித்து வந்தார் ஸ்ருதி. சமந்தாவை காதலிக்கும் முன்பே சித்தார்த் ஸ்ருதி ஹசனுடன் மூன்று வருடமாக பழகி வாழ்ந்து வந்தார். அதன்பின் இருவரும் பிரிந்துவிட்டனர்.

நாக சைதன்யா

நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவை, முதலில் காதலித்து வந்தது ஸ்ருதி ஹாசன் தான். சிலகாரணங்களால் இருவரும் பிரிந்தப்பின் சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நாக சைதன்யா.

சாந்தனு

டூடுல் கலைஞராக திகழ்ந்து வரும் சாந்தனு என்பவருடன் பல வருடங்களாக லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறார் நடிகை ஸ்ருதி ஹாசன். தர்போது வரை இருவரும் ஒன்றாக வெளிநாடு செல்வது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதுமாக இருந்து வருகிறார். ஆனால் ஸ்ருதி ஹாசனிடம் திருமண கேள்வி கேட்டால் அதற்கு நோ என்று கூறியும் நினைக்கும் போது சொல்வேன் என்றும் கூறி வருகிறார். அப்பா வாழ்க்கையை அப்படியே ஸ்ருதி ஹாசன் கடைப்பிடித்து வருகிறார் என்ற விமர்சனமும் எழுந்து வருகிறது.