29 ஆண்டுகால திருமண வாழ்க்கை!! விவாகரத்தாக இதுதான் காரணம்!! ஏ ஆர் ரஹ்மான் ஆதங்கம்..
ஏ ஆர் ரஹ்மான்
இந்திய சினிமாவின் இசைப்புயல் என்று புகழப்படும் ஏ ஆர் ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், சினிமா புகழ் தனது குடும்ப வாழ்க்கையை பாதித்தது என்று தெரிவித்துள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஏ ஆர் ரஹ்மான் அளித்த பேட்டியில், சினிமா புகழ் என் குடும்ப வாழ்க்கையை கடுமையாக பாதித்தது. குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதை தடுத்தது. இதனால் கடந்த ஆண்டு தன்னுடைய 29 ஆண்டுகால திருமண வாழ்க்கை முறிந்து மனைவி சாய்ரா பானுவை பிரிந்தேன்.

தன் 3 பிள்ளைகளும் மனைவி சாய்ராவின் பராமரிப்பில் உள்ளார்கள். அரிதாக வெளியிடங்களுக்கு செல்வதாகவும், அப்படிச் செல்லும்போது கூட புகைப்படம், செல்ஃபி கேட்கும் ரசிகர்களை சமாளிப்பது கடினமாக இருக்கிறது.
உணவு விடுதி, உறவினர் வீட்டு விசேஷ நிகழ்வுகளில் உணவருந்தக்கூட ரசிகர்கள் விடுவதில்லை. தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் என்று கூறினாலும் அதை பொருட்படுத்தாமல் செல்ஃபி எடுக்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.
அதேசமயம், தன்னிடம் புகைப்படம் எடுக்க வரும் ரசிகர்களை முகத்தில் அடித்தார்போல் ஹாலிவுட் நடிகர்கள் கண்டிக்கும் நிலையில், இந்திய நடிகர்கள், அதில் மாறுபட்டு இருக்கிறார்கள். அனைத்து இயக்குநர்களும் தனக்கு நண்பர்கள்.
வேலைப்பளுவால் நண்பர்களுடன் நேரம் செலவிடுவது கடினமாக இருக்கிறது. குடும்ப உறவினர்களும் அவர்களுக்கான வாழ்க்கையில் தீவிரம் காட்டி வருவதால் அவர்களை ஒன்றிணைத்து உணவு விருந்துகளில் கலந்து கொள்வதும் கடினமாக இருக்கிறது என்று ஏ ஆர் ரஹ்மான் தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.