நடிகை ருக்மிணி வசந்த் தந்தை யார் என்பது முதல் அவர் வாங்கும் சம்பளம் வரை.. 5 Facts About ருக்மிணி

Actress Rukmini Vasanth
By Kathick Dec 11, 2025 03:30 AM GMT
Report

கன்னடத்தில் வெளிவந்த சாகரதாச்சே எல்லோ படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக மாறியவர் ருக்மிணி வசந்த். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த காந்தாரா சாப்டர் 1 ரூ. 855 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கி வரும் ருக்மிணி வசந்தின் பலருக்கும் தெரியாத 5 Facts குறித்துதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.

நடிகை ருக்மிணி வசந்த் தந்தை யார் என்பது முதல் அவர் வாங்கும் சம்பளம் வரை.. 5 Facts About ருக்மிணி | 5 Facts About Actress Rukmini Vasanth

நடிகை ருக்மிணியின் தந்தை

ருக்மிணி வசந்தின் தந்தை கர்னல் வசந்த் வேணுகோபால். இவர்தான் கர்நாடகாவின் முதல் அசோக சக்ரா விருதை பெற்றவர். 2007ம் ஆண்டு அவரது துணிச்சலுக்காக, அவருடைய வீர மரணத்திற்கு பின் இந்த விருது வழங்கப்பட்டது.

நடிகை ருக்மிணியின் தாய்

நடிகை ருக்மிணி வசந்தின் தாயார் சுபாஷினி வசந்த், ஒரு திறமையான பரதநாட்டிய நடன கலைஞர் ஆவார். மறைந்த தனது கணவரின் நினைவை போற்றும் வகையில், போர்களில் வீர மரணமடைந்தவர்களின் மனைவிகள் மற்றும் அவர்களது குடும்பங்களை ஆதரிப்பதற்காக அறக்கட்டளை நடத்தி வருகிறார்.

பொழுதுபோக்குகள்

நடிப்பை தாண்டி, புத்தகம் வாசிப்பது, சமைப்பது, படங்கள் வரைவது போன்ற விஷயங்கள் தனது மனதிற்கு நிம்மதி தருவதாக உணர்கிறார் ருக்மிணி வசந்த்.

பிடித்த உணவு

நெய், உப்பு மற்றும் ஒரு முட்டையுடன் சூடான சாதம் ருக்மிணி வசந்தின் விருப்பமான உணவுகளில் ஒன்றாகும் என்கின்றனர். மேலும், அவளுக்கு இளநீர் மிகவும் பிடித்த ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ருக்மிணி வசந்த் தந்தை யார் என்பது முதல் அவர் வாங்கும் சம்பளம் வரை.. 5 Facts About ருக்மிணி | 5 Facts About Actress Rukmini Vasanth

சினிமா பயணம், சம்பளம்

6 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வரும் ருக்மிணி வசந்த் இன்று மோஸ்ட் வான்டட் நடிகையாக மாறியுள்ளார். இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 1 கோடி வரை சம்பளம் பெறுகிறார். மேலும் விரைவில் பாலிவுட் படத்தில் நடிக்க போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.