பணக்கார பெண்ணை திருமணம் செய்துகொண்ட நடிகர்கள்.. இந்த லிஸ்ட்டில் தளபதி மனைவியுமா

Vijay Allu Arjun Ram Charan Actors Dulquer Salmaan
By Edward Oct 05, 2022 05:30 PM GMT
Report

சினிமாவில் ஜோடியாக நடித்து சக நடிகையை திருமணம் செய்து கொண்ட நடிகர்கள் இருக்கிறார்கள். அதில், அஜித், சூர்யா, பிரசன்னா உள்ளிட்டவர்கள் அடங்குவார்கள். ஆனால் வீட்டில் பார்த்து திருமணம் செய்து கொண்ட நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். சினிமாக்காரர்கள் என்றாலே பெண் கொடுக்க யோசிக்கும் பெண் வீட்டார்கள் மத்தியில் சில பெண்களும் மனமுவந்து திருமணம் செய்து கொள்வார்கள். அதில் டாப் நடிகர்கள் சிலர் பணக்காரப்பெண்ணை மணமுடித்தும் இருக்கிறார்கள். அந்த தென்னிந்திய சினிமாவின் நடிகர்கள் லிஸ்ட்டை பார்ப்போம்.

ராணா டகுபதி

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ராணா டகுபதி கடந்த 2020 ஆம் ஆண்டு கட்டிட உள் வேலை அமைப்புகளை செய்யும் நிறுவனத்தினை நடத்தி வரும் மஹீகா பஜாஜ் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

துல்கர் சல்மான்

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் பிரபல தொழிலதிபர் மகள் அமுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சினேகா ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். சினேகா ரெட்டியின் தாய் தந்தை இருவருமே மிகப்பெரிய தொழிலதிபர் குடும்பம் தானாம்.

ராம் சரண்

மெகா ஸ்டார் சிரஞ்சீவி மகன் ராம் சரண் அப்பல்லோ பவுண்டேஷனின் நிறுவனர் உபாசனா காமினேனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 10 வருடமாகியும் இன்னும் இந்த தம்பதியினர் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை.

விஜய்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் 100 கோடி சம்பளம் வாங்கும் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். சங்கீதாவின் தந்தை சொர்ணலிங்கம் மிகப்பெரிய தொழிலதிபர். தற்போது கூட விஜய்யின் மகன், மகள் இருவரும் சங்கீதாவின் தந்தை வளர்ப்பில் கனடாவின் வசித்து வருகிறார்கள்.

அல்லு அர்ஜுன்

சமீபத்தில் புஷ்பா என்ற படத்தின் மூலம் மிகப்பெரிய ஹிட் கொடுத்த அல்லு அர்ஜுன், 2011ல் சினேகா ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். சினேகா ரெட்டியின் தாய் தந்தை இருவருமே மிகப்பெரிய தொழிலதிபர் குடும்பம் தானாம்.