நிச்சயத்தோடு சோலியை முடித்துக்கொண்ட 5 திருமணங்கள் !! 39 ஆகியும் தனிமரமான திரிஷா..

Vishal Nayanthara Trisha Rashmika Mandanna Sanam Shetty
By Edward May 31, 2023 10:15 PM GMT
Report

சினிமா பிரபலங்கள் பொதுவாக திருமணம் செய்வதை 30 வயதான பிறகும் தள்ளிப்போடுவார்கள். அதில் நடிகைகள் 40 வயதை எட்டியும் கல்யாணம் செய்ய மறுப்பார்கள். அதற்கு காரணம் மார்க்கெட்டும், கேரியரும் தான். அப்படி சிலர் திருமணம் வரை சென்று கேரியர் முக்கியம் என்று கல்யாணமே வேண்டாம் என்ற முடிவெடுத்திருக்கிறார்கள். அப்படி திருமணத்தையே நிறுத்தி சில நட்சத்திரங்களை பார்ப்போம்.

திரிஷா - வருண் மணியன்

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்த திரிஷா தொழிலதிபர் வருண் மணியன் என்பவருடன் நிச்சயம் செய்து அதன்பின் சில கருத்து வேறுபாட்டால் திருமணத்தையே நிறுத்தியிருக்கிறார். இதற்கு காரணம் காதலில் விழுந்ததுதான். அதன்பின் 40 வயதை எட்டியும் திருமணமே வேண்டாம் என்று கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்.

விஷால் - அனிஷா

நிச்சயம் வரை சென்று பின் சில காரணங்களால் திருமணத்தையே நிறுத்தி சென்றார் நடிகர் விஷால். அனிஷா ஷெட்டி என்பவருடன் நிச்சயம் செய்த போது வரலட்சுமியுடன் நெருக்கம் காட்டியது தான் திருமணம் நின்றுபோக காரணம் என்று கூறப்படுகிறது.

சனம் செட்டி - தர்ஷன்

பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமான மாடல் சனம் செட்டி தர்ஷனை நிச்சயம் செய்தார். அதன்பின் கருத்து வேறுபாடுகள் பிக்பாஸ் நிகழ்ச்சியால் ஏற்பட்டதால் இருவரும் பிரிந்தனர். அதன்பின் தர்ஷன் வேறொருவரை திருமணம் செய்து கொண்டார்.

நயன் தாரா - பிரபுதேவா

லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெறுவதற்கு முன் சிம்புவை காதலித்து பிரேக் அப் செய்தார் நயன் தாரா. அதன்பின் பிரபுதேவாவை தீவிரமாக காதலித்து வந்தார். நிச்சயம் வரை செல்ல நேர்ந்த போது பிரபு தேவாவின் முதல் மனைவியால் திருமணம் நிறுத்தப்பட்டது.

ராஷ்மிகா - ரஷித்

கன்னட சினிமாவில் அறிமுகமாகியதோடு சக நடிகரான ரஷித்துடன் காதல் ஏற்பட்டு நிச்சயம் வரை சென்றால் நடிகை ராஷ்மிகா மந்தனா. அதன்பின் கருத்து வேறுபாட்டால் பிரிந்து கன்னட பக்கமே செல்லாமல் நேஷ்னல் கிரஷ்-ஆக சுற்றி வருகிறார்.