தமிழே தெரியாமல் மாஸ் காட்டும் 5 பாடகர்கள்.. ஒரே பாட்டுக்கே 3 கோடி வாங்கும் பாடகி..
5 பாடகர்கள்
தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் தமிழ் பேசும் நடிகைகளை காட்டிலும் மற்றமொழி பேசும் நடிகைகள் தான் அதிகமாக இருக்கிறார்கள். நயன் தாரா முதல் சமீபத்தில் சென்ஷேஷ்னல் நடிகையாக வளம் வரும் காயடு லோகர் உட்பட பல நடிகைகள் தமிழ் தெரியாமல் வந்தவர்களாக இருக்கிறார்கள்.
அந்தவகையில் சில பின்னணி பாடகர்கள் மொழியே தெரியாமல் தமிழ் பாடல்களை பாடி பிரபலமாகியிருக்கிறார்கள். அப்படி தமிழ் தெரியாமல் பாட்டு பாடி கலக்கும் 5 பாடகர்கள் யார் யார் என்பதை பார்ப்போம்..
உதித் நாராயணன்
பின்னணி பாடகர் உதித் நாராயணன், பீகாரை சேர்ந்தவராக தமிழ் பாடல்களை பாடி மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். இந்தியாவில் பல மொழிகளில் பாட்டு பாடி அசத்திய உதித் நாராயணன், 4 தேசிய விருதிகளை பெற்றிருக்கிறார்.
சோனு நிகம்
பின்னணி பாடகர் சோனு நிகம் தமிழே தெரியாமல் ஆருயிரே, மனசெல்லாம் மழையே, உன் விழியில், வாராயோ தோழி என பல ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார். 32 மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடி அசத்தி வருகிறார் பாடகர் சோனு நிகம்.
லதா மங்கேஷ்கர்
இந்தியாவின் 90 கேர்ள், மில்லினியத்தின் குரல் என்று புகழப்பட்டு எட்டு சகாப்தங்களாக இந்திய இசைத்துறையில் சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார் பாடகி லதா மங்கேஷ்கர். 3 தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளை தன் குரலால் பெற்றவர். தமிழில் இசைஞானி இசையில் ஆராரோ ஆராரோ, வலையோசை போன்ற பாடல்கள் இன்று வரை பலரின் ஃபேவரெட் பாடலாக இருக்கிறது.
ஆஷா கோஸ்லே
பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் சகோதரியான ஆஷா கோஸ்லேவும் தமிழே தெரியாமல் பல ஹிட் பாடல்களை பாடி அசத்தி வந்தார். 2 தேசிய விருதுகளை பெற்ற ஆஷா கோஸ்லே, செண்பகமே செண்பகமே, செப்டம்பர் மாதம், நீ பார்த்த இரவுக்கு ஒரு நன்றி, எங்க ஊரு காதலா, உன்னை நான் உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார்.
ஸ்ரேயா கோஷல்
இந்திய சினிமாவில் பல மொழிகளில் பாடி அசத்தி வரும் ஸ்ரேயா கோஷல், தமிழே தெரியாமல் பல ஹிட் பாடல்களை பாடி வருபவர். 5 தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளுக்கு சொந்தக்காரியான ஸ்ரேயா கோஷல், இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பாடகியாகவும் திகழ்ந்து வருகிறார்.