மீனாவை பத்தி அப்படி சொல்ல அதான் காரணம்!! பிரபலம் அதிரடி பேச்சு..
நடிகை மீனா
90ஸ் காலக்கட்டத்தில் டாப் நடிகையாக இருந்து கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை மீனா. முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த மீனா, தன் மகள் நைனிகாவையும் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார்.
கணவர் வித்யாசாகர் மறைவு மீனாவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. தற்போது அதிலிருந்து மீண்டு வந்த மீனா, நெருங்கிய தோழிகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

சூழல் இப்படியிருக்க அவர் பற்றி கடந்த சில காலமாகவே பலரும் பலவிதமான தகவல்களை பரப்பி வருகிறார்கள். அதாவது அரசியலுக்கு மீனா வருகிறார் என்றும் பாஜகவில் ஐக்கியமாகிவிட்டார் என்றும் கூறுகிறார்கள்.
இதுகுறித்து பிரபல பத்திரிக்கையாளர் சேகுவாரா, பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.

சேகுவாரா
அதில், விஜய்யை மீனா சந்தித்தாக சிலர் பேசுகிறார்கள், ஆனால் அதெல்லாம் பழைய சந்திப்பு, அதேபோல் அவர் முன்னாள் துணை ஜனாதிபதியை சந்தித்ததை வைத்தும் பலவிதமாக பேசுகிறார்கள். பொதுவாக ஒரு பெண், அதுவும் நடிகை, கணவரை இழந்து தனியாக வாழ்ந்தாலே இப்படித்தான் பேசுவார்கள். ஏன் பழைய விஷயங்களை எல்லாம் கிளப்ப வேண்டும் என்று தெரியவில்லை.
அவரது கணவர் உயிரோடு இருந்தபோது மீனா பற்றி செய்தியே வரவில்லையே, கலா மாஸ்டர் பாஜகவை சார்ந்து பயணப்படுகிறார். ஆனால் மீனா பாஜகவில் சேரவில்லை, பிரதமருடைய பொங்கல் விழாவில் மீனா பங்கேற்றதற்கு காரணம் கலா தான். மீனாவுக்கு சில விஷயங்கள் பெர்சனலாக நடக்க வேண்டுமென்பதால் தான் இந்த தொடர்புகள் வந்திருக்கிறது, அது ஒரு நிலம் சார்ந்த பிரச்சனை என்று சேகுவாரா தெரிவித்துள்ளார்.