55 நாள் ஷூட்!! டப்பிங் போன நடிகை பிரியா பவானி சங்கருக்கு இயக்குநரால் நடந்த ஏமாற்றம்..
பிரியா பவானி சங்கர்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர்.
கடைக்குட்டி சிங்கம், மேயாத மான் உள்ளிட்ட படங்களில் நடிக்க ஆரம்பித்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வந்தார். சமீபத்தில் இந்தியன் 2, டிமான்ட்டிகாலணி, பிளாக் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
பிளாக் படம் கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று 3 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்து வருகிறது. சமீபத்தில் பிளாக் படத்தின் பிரமோஷனுக்காக பேட்டியளித்த பிரியா பவானி சங்கர், பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
55 நாள் ஷூட்
அதில் ஒரு பெரிய ஹீரோ படத்தில் நடித்தேன் 55 நாட்கள் வெயில், மழைன்னு ஷூட் பண்ணினேன்.
ஆனால் டப்பிங் சென்றபோது அரைநாள் படம் தான் இருக்கு, என்னிடம் சொன்னது கதை என்ன, இங்க இருக்கிறது என்ன, என்னை வைத்து ஷூட் பண்ணதெல்லாம் எங்கன்னு கேட்டப்போது, அதெல்லாம் மியூசிக்கில் வரும் என்று சொன்னார்கள்.
எனக்கு ஒருமாதி பயங்கமா இருந்துச்சு. படிக்கிறது, கேட்கிறது எல்லாமே ஸ்க்ரீனில் வரும் என்று சொல்ல முடியாது. ஹீரோவுக்கு கால் செய்து கேட்டபோது நானே 135 நாள் ஷூட் போன என் சீனே இல்லைன்னு சொன்னாரு.