அந்த 6 நடிகைகளின் சினிமா வாழ்க்கை கேள்விக்குறியாக்கிய திரிஷா.. அடம்பிடிக்கும் டாப் நடிகர்கள்..
தமிழ் சினிமாவில் 90களின் கனவுக்கன்னியாக இருந்து வந்தவர் நடிகை திரிஷா. ஜோடி படத்தில் சிறு கதாபாத்திரத்தில் ஆரம்பித்த சினிமா வாழ்க்கையில் தற்போது முன்னணி நடிகை என்ற இடத்தையும் பிடித்து வந்தார். சில நடிகைகளைப் போல திரிஷாவும் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ள நினைத்தார்.
அப்போது தொழிலதிபர் வருண் மணியன் என்பவருடன் காதல் வலையில் விழுந்த சில காலம் காணாமல் போனார். அப்படி இருந்தும் தற்போது வரை பல நடிகைகளின் மார்க்கெட்டை அழிக்கும் அளவிற்கு மிகப்பெரிய இடத்தினை திரிஷா பெற்று வந்துள்ளார்.
அப்படி 6 முக்கிய நடிகைகளி வாழ்க்கையை நாசமாக்கிவிட்டதாக கோலிவுட் சினிமா விமர்சகர்கள் கூறி வந்துள்ளனர். அதன்பின், திரிஷாவின் ஆரம்பகால வளர்த்தியால் நடிகை சினேகா, அசின், பூஜா, சதா, ஜெனிலியா போன்ற நடிகைகளும் அதற்கிடையில் நடிகை நயன் தாராவும் பெரும் மார்க்கெட்டை இழந்துள்ளார்களாம்.
அதில் லேடி சூப்பர் ஸ்டார் பெயரை எடுத்த நயன்தாராவை ஒதுக்க குந்தவை கதாபாத்திரம் மிகப்பெரிய பங்காற்றி இருக்கிறது.
மேலும், விஜய், அஜித், தனுஷ் உள்ளிட்ட டாப் நடிகர்களின் படங்களில் இவர் தான் வேண்டும் என்று ஹீரோக்களே சிபாரிசு செய்து வருகிறார்கள். அந்தவகையில் கையில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி தன்னுடைய கெத்தை ஆரம்பித்துள்ளார் திரிஷா.