நயன்தாரா முதல் ஐஸ்வர்யா ராய் வரை!! கணவரைவிட அதிக சொத்து வைத்திருக்கும் நடிகைகள்..
இந்திய சினிமாவில் நடிக்கும் நடிகைகள் கணவர்களைவிட அதிக சொத்துக்களை வைத்திருப்பார்கள். அப்படி பல கோடிகளில் சம்பளம் வாங்கி, கணவர்களை அதிக சொத்துக்களை சேர்த்து வைத்திருப்பார்கள். அந்தவகையில் இந்திய நடிகைகளில் யார் யார்? கணவர்களைவிட அதிக சொத்துக்களை வைத்திருக்கிறார் என்று பார்ப்போம்..
அதிக சொத்து வைத்திருக்கும் நடிகைகள்
உலக அழகியாகவும் இந்திய சினிமாவின் டாப் நடிகையாகவும் திகழ்ந்த நடிகை ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு ரூ. 900 கோடி. அவரின் கணவர் அபிஷேக் பச்சனின் சொத்து மதிப்பைவிட கிட்டத்தட்ட ரூ. 450 கோடி அதிகமாக வைத்துள்ளார்.
ரூ. 500 கோடி சொத்து மதிப்பு வைத்திருக்கும் தீபிகா படுகோனேவின் கணவர் ரன்வீர் சிங்கின் சொத்து மதிப்பு ரூ. 245 கோடி தானாம்.
நடிகை ஆலியா பட்டின் சொத்து மதிப்பு ரூ. 550 கோடி வைத்துள்ளார். ஆனால், ஆலியாவின் சொத்து மதிப்பு கணவர் ரன்பீர் கபூரின் சொத்தைவிட ரூ. 345 கோடி அதிகமாம்.
நடிகை கத்ரீனா கைஃப்பின் சொத்து மதிப்பு கணவர் விக்கி கெளஷலைவிட அதிகமாம். கத்ரீனாவின் சொத்து மதிப்பு ரூ. 224 கோடியாம்.
நடிகையும் ஐபிஎல் தொடரின் பஞ்சாப் அணியின் உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தாவின் சொத்து மதிப்பு ரூ. 183 கோடியாம். அவரது கணவரின் சொத்தைவிட அதிகம் இருக்கிறதாம்.
நடிகை நயன்தாராவின் சொத்து மதிப்பு ரூ. 200 கோடியாக மதிப்பிட, விக்னேஷ் சிவனின் சொத்து மதிப்பு ரூ. 50 கோடிக்கு மேல் இருக்கிறதாம்.
நடிகை பிபாஷாவின் சொத்து மதிப்பு ரூ. 130 கோடி இருக்கையில் அவரது கணவர், பிபாஷாவைவிட குறைவான சொத்து மதிப்பை வைத்துள்ளாராம்.