308 ரன்கள் விளாசிய பிரதிகா ராவலுக்கு பதக்கம் தர மறுப்பு!! ICC விதி இதுதான்..
மகளிர் உலக கோப்பை
13வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. 8 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்ற நிலையில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்கு நுழைந்தன.

45.3 ஓவர்களில் 246 ரன்களை எடுத்த தென் ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் இந்தியா, சாம்பியன்ஸ் பட்டம் வென்று மாபெரும் சாதனை படைத்துள்ளது. மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணி வெல்லும் முதல் உலகக்கோப்பை இதுவே ஆகும்.
பிரதிகா ராவல்
இந்நிலையில், உலக கோப்பை தொடரில் லீக் சுற்றில் அபாரமாக விளையாடி 308 ரன் குவித்தவர் தான் பிரதிகா ராவல். பங்களாதேஷ் அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது அவருக்கு ஏற்பட்ட கணுக்கால் காயத்தால் பாதியில் உலககோப்பை தொடரில் இருந்து வெளியேறினார்.

லீக் சுற்றில் 6 போட்டிகளில் விளையாடிய பிரதிகா ராவல், 308 ரன்கள் குவித்து 51.33 என்ற அபாரமான சாரசரியில் விளையாடியிருக்கிறார். காயம் காரணமாக அவர் வெளியேறியதால் அவருக்கு பதில் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா சேர்க்கப்பட்டார்.
இதனால் இறுதி போட்டியில் வென்ற வீராங்கனைகளுக்கு போடப்பட்ட பதக்கம், பிரதிகா ராவலுக்கு போடவில்லை.

ஐசிசி விதி
ஐசிசி விதிப்படி ஒரு தொடரின் முடிவில், இறுதிப்போட்டியில் 15 பேர்கொண்ட அதிகாரப்பூர்வ அணியில் இடம்பெற்ற வீரர்களுக்கு மட்டுமே வெற்றியாளருக்கான பதக்கங்கள் வழங்கப்படும் என்பதால் பிரதிகா ராவலுக்கு அணிவிக்கப்படவில்லை.
என்னதான் அவருக்கு பதக்கம் கிடைக்காவிட்டாலும், கோப்பை வென்ற சக வீராங்கனையுடன் வீல் சாரில் வந்தபடி கொண்டாடினார் பிரதிகா ராவல்.