திருமணத்திற்கு பின் நான் பண்ண தப்பு அதான்!! நடிகை சோனியா அகர்வால் ஓபன் டாக்..
சோனியா அகர்வால்
தென்னிந்திய சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்தவர் தான் நடிகை சோனியா அகர்வால். இயக்குநர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்த சில ஆண்டுகளில் அவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார். இதன்பின் சோனியா அகர்வால், திருமணம் செய்யாலமே தனியாக வாழ்ந்தும் படங்களில் நடித்தும் வருக்கிறார்.
நான் பண்ண தப்பு
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், நான் காதல் கொண்டேன் படம் பண்ணும்போது அது சின்ன பட்ஜெட் படம், ஆனல பெரிய வெற்றிபெற்றது. எப்போதும் கதைதான் ஜெயிக்கும். முன்பைவிட இப்போது சோஷியல் மீடியா மிகப்பெரியளவில் வளர்ந்துவிட்டது. அதன்மூலம் பலரின் அன்பு கிடைக்கிறது.
காதல் கொண்டேன் பார்ட் 2 வர பிளான் இருக்குது, அதுகுறித்து என்னிடம் பேசினார்கள். எனக்கு சமூகத்துக்கு ஏதாவது நல்லது செய்ய ஐடியா இருக்கிறது. இப்போதைக்கு அரசியலுக்கு வர ஐடியா இல்லை, விஜய் கட்சியிலும் சேருவது குறித்து யோசிக்கவில்லை.
நான் வாழக்கையில் தவறான முடிவு எடுத்துவிட்டேன். அதாவது நான் பீக்கில் இருந்தபோது ஒரு பிரேக் எடுத்துவிட்டேன். திருமணத்திற்கு பின் நான் நடிக்கவில்லை, அதான் நான் செய்த மிகப்பெரிய தவறு.
நான் புதுப்பேட்டை படத்தில் நடித்துக்கொண்டு இருந்தபோது பிரபாஸுடன் தெலுங்கு படம் ஒன்றிலும் ஜூனியர் என் டி ஆருடன் ஒரு படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக நடிக்க முடியாமல் போனது. அந்த இரு படமும் தெலுங்கில் பெரியளவில் வெற்றி பெற்றது என்று சோனியா அகர்வால் தெரிவித்துள்ளார்.