பிக் பாஸ் வாய்ஸாக இருந்தவர், இப்போது சீசன் 9-ல் போட்டியாளர்.. இவரா?

Vijay Sethupathi TV Program Bigg boss 9 tamil
By Bhavya Nov 05, 2025 10:30 AM GMT
Report

 பிக் பாஸ்

கடந்த மாதம் ஆரம்பமான பிக் பாஸ் 9 தற்போது 25 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. முதல் வாரம் முடிவதற்குள் ரம்யா வீட்டில் இருந்து தானாக முன் வந்து வெளியேறினார்.

இதை தொடர்ந்து அதே வாரம் பிரவீன் காந்தி வெளியேற்றப்பட்டார். இதன்பின் அப்சரா மற்றும் ஆதிரை மற்றும் கலையரசன் என இதுவரை ஐந்து போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.

பிக் பாஸ் வாய்ஸாக இருந்தவர், இப்போது சீசன் 9-ல் போட்டியாளர்.. இவரா? | Do You Know Bigg Boss Voice Artist Now Contestant

தற்போது நான்கு புது வைல்டு கார்டு எண்ட்ரியை பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி இருக்கின்றனர். மேலும், பிக் பாஸ் ஹோட்டல் டாஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது.

இதில் கெஸ்ட் ஆக முந்தைய சீசன் போட்டியாளர்களை வீட்டுக்குள் அனுப்பி இருக்கின்றனர்.

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு குரல் கொடுப்பவர் யார் என்பதை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும், சாஷோ என்பவர் தான் அது என்று ரசிகர்கள் இணையத்தில் செய்திகள் பரப்பி வருகின்றனர்.

இவரா? 

இந்நிலையில், கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வாய்ஸ் கொடுத்து வந்த ஒருவர் தற்போது பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?

ஆம், அந்த போட்டியாளர் வேறுயாருமில்லை அமித் பார்கவ் தான். இவர் தான் கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனுக்கு வாய்ஸ் கொடுத்திருக்கிறார்.  

பிக் பாஸ் வாய்ஸாக இருந்தவர், இப்போது சீசன் 9-ல் போட்டியாளர்.. இவரா? | Do You Know Bigg Boss Voice Artist Now Contestant