டாக்டர் பட்டத்தை நம்பி ஏமாந்த 8 பிரபலங்கள்!! வடிவேலுக்கே வீடுதேடி சென்று விபூதி அடித்த நிறுவனம்

D Imman Deva Vadivelu
By Edward Mar 03, 2023 11:00 AM GMT
Report

இந்தியாவில் அனைத்து துறையிலும் சாதித்தவர்களுக்கென சிறப்பு விருதுகள் பட்டங்கள் கொடுப்பது வழக்கம். அப்படி தனித்தன்மையோடு செயல்பட்டவர்களுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவதுண்டு.

அந்தவகையில் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து டாக்டர் பட்டம் தருவதாக கூறி ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை அமைப்பு ஒன்று திட்டம் தீட்டி பல பிரபலங்களை ஏமாற்றியிருப்பது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

டாக்டர் பட்டத்தை நம்பி ஏமாந்த 8 பிரபலங்கள்!! வடிவேலுக்கே வீடுதேடி சென்று விபூதி அடித்த நிறுவனம் | 8 Celebrities Who Got Insulted Like Vadivelu

சமீபத்தில் வடிவேலு, தேவா, சேரன், டி இமான், ஈரோடு மகேஷ், சாண்டி மாஸ்டர், கோபி, சுதாகர் உள்ளிட்டவர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதாக, தமிழக அரசு முத்திரையுடன் அழைப்பிதழ் அடித்து வெளியிட்டது. இதை நம்பி அவர்களும் அந்நிகழ்ச்சிக்கு சென்று பட்டத்தை பெற்றனர்.

அதில் வடிவேலுவின் வீட்டிற்கே சென்ற அந்நிறுவனம் பல விசயங்களை கூறியும் பட்டத்தை கொடுத்தும் இருக்கிறது. ஆனால் அவர்கள் கொடுத்த டாக்டர் பட்டம் போலியானது என்ற உண்மை சமீபத்தில் வெளியாகியிருக்கிறது.

நன்றாக திட்டம் போட்டு ஏமாற்றி பிரபலங்கள் நெற்றியில் விபூதி அளித்திருப்பது தற்போது பேசு பொருளாக மாறியிருக்கிறது. இதுகுறித்து அண்ணா பல்கலைகழகமும் விளக்கம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.