70 வயதில் 4வது திருமணம்!! மனைவியுடன் ஹாயாக உலாவும் 80 வயது நடிகர்...
70 வயதில் 4வது திருமணம்
பாலிவுட் சினிமாவில் பிரபல மூத்த நடிகராக திகழ்ந்து வரும் 80 வயதான நடிகர் தான் கபீர் பேடி. பல திரைப்படத் துறைகள், கண்டங்கள், பல்வேறு குடும்பங்களுக்கு இடையில் பயணித்தவர்.

சமீபத்தில் வெளியான அவரது புதிய சுயசரிதை ஸ்டோரிஸ் ஐ மஸ்ட் டெல் மூலம் தன்னை மாற்றிய பல நிகழ்வுகளைவிட, தன் வாழ்க்கையை வடிவமைத்த மனிதர்களை பற்றி அதிகம் விவரித்துள்ளார்.
கடந்த 2016ல் கபீர் பேடி, பிரிட்டிஷ் வம்சாவளியான பர்வீன் துசான்ஜை என்பவரை 4வது திருமணத்தை செய்தார். ஏற்கனவே 3 முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற கபீர் பேடி, தன்னுடைய முதல் மனைவி ப்ரோட்டிமா பேடியுடன் ஒரு திறந்த திருமண உறவு இருந்ததை வெளிப்படுத்தினார்.

நாம் ஒன்றாக இருக்க விரும்பினால் அது குழந்தைகளுக்காத்தான், ஒருவேளை அவளும் நானும் வேறு உறவுகளை விரும்பினால், திறந்த திருமணமே சிறந்த வழி என்று கபீர் பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய 4வது மனைவி பர்வீன் துசான்ஜையுடன் கைக்கோர்த்தபடி பொதுவெளியில் ரொமாண்டிக்காக நடந்து சென்ற வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.