படுமோசமாக குண்டாகி அடையாளம் தெரியாமல் போன 60 வயதான நடிகை! தற்போதைய நிலை..
தமிழ் சினிமாவில் நடித்த சில நடிகைகள் தற்போது என்ன செய்கிறார்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்ற கேள்விகள் இருக்கும். அப்படியான யாரும் அறியப்படாத நிலைக்கு தற்போது இருக்கும் நடிகை சரிதா.
1978ல் இயக்குநர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக தப்பு தாளங்கள் என்ற படத்தில் நடித்தவர் நடிகை சரிதா. இதையடுத்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என 160 படங்களுக்கு மேல் நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தினை 90களில் கூட தக்க வைத்திருந்தார்.
இதையடுத்து திருமணம் விவாகரத்து என இரு திருமணங்கள் ஏமாற்றத்தில் முடிந்து 2011ல் இருந்து தனிமையில் இருந்து வருகிறார். இதுதவிர பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்தும் வந்துள்ளார். 2001ல் வெளியான நடிகர் விஜய்யின் பிரண்ட்ஸ் படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்து ரீஎண்ட்ரி கொடுத்தார்.
அதில் இதுவரை 6 ஃபில்ஸ்பேர் விருதுகள், 6 நந்தி விருதுகள், 5 மாநில விருகள் என விருதுகளை அள்ளிக்குவித்துள்ளார். இந்நிலையில், தற்போது 60 வயதான நடிகை சரிதாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவருடன் நடிகை ஸ்ரீபிரியா இருக்கிறார்.