திருமணமே செய்யாமல் 29 வயது காதலி கர்ப்பம்!!அப்பாவான 83 வயதான நடிகர்

Relationship Hollywood
By Edward May 31, 2023 11:12 AM GMT
Report

உலகளவில் நடிப்பு அசுரனாக திகழ்ந்து மிகப்பெரிய வெற்றிபடங்களில் நடித்து உலக புகழ் பெற்ற நடிகராக விளங்கி வருபவர் நடிகர் அல் பசீனோ. 1972ல் வெளியான தி காட் பாதர் படத்தில் மார்லன் பிரண்டோவின் மகனாக நடித்து அனைவரையும் ஈர்த்த அல் பசீனோ, 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

ஜானி டெப் இயக்கப்போகும் அடுத்த படமான மோடி படத்தில் முக்கிய ரோலில் நடிக்க போகிறார் அல் பசீனோ. இந்நிலையில் நடிகர் அல் பசீனோ ஏற்கனவே 1988ல் ஜன் டரண்ட் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஒரே வருடத்தில் அவரைவிட்டு பிரிந்தார்.

திருமணமே செய்யாமல் 29 வயது காதலி கர்ப்பம்!!அப்பாவான 83 வயதான நடிகர் | 83 Old Al Pacino Expecting Child With Girlfriend

அதன்பின் 1997ல் பிவர்லி டி ஏஞ்சலோ என்ற ஹாலிவுட் நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் அவரையும் சில ஆண்டுகளுக்கு பின் விவாகரத்து செய்தார். இதனைதொடர்ந்து 2008ல் லூசிலா போலக் என்பவரை காதலித்து குழந்தைகளை பெற்றார்.

அவரையும் 10 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டார். கொரானா காலக்கட்டத்திற்கு முன் நூர் அல்ஃபலாவுடன் இல்லற வாழ்க்கையை திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார் அல் பசீனோ. தற்போது 83 வயதான அல் பசீனோ தன்னுடைய 29 வயது காதலியை கர்ப்பமாக்கியுள்ளார்.

அல் பசீனோவின் முதல் குழந்தைக்கு 33 வயதாகிய நிலையில் 29 வயதான காதலியை கர்ப்பமாக்கிய செய்தி தற்போது உலகளவில் பேசு பொருளாக மாறியிருக்கிறது.