பூண்டு, வெங்காயத்தால் விவாகரத்து!! ஜீவனாம்சம் கேட்ட மனைவிக்கு விழுந்த இடி..
திருமணமான தம்பதியினர் சமீபகாலமாகவே விவாரத்து பெற்று பிரிவது அதிகரித்துவிட்டது. அதிலும் சம்பந்தமே இல்லாத காரணங்களை சுட்டிக்காட்டி மனைவிகள் விவாகரத்து படிகளை ஏறுகிறார்கள். அப்படி ஒரு வெங்காயத்தால் 11 ஆண்டுகால திருமண வாழ்க்கை வாழ்ந்த தம்பதியினருக்கு விவாகரத்து நடந்துள்ளது.

பூண்டு மற்றும் வெங்காயம்
சுவாமி நாராயணனின் பக்தரான குஜராத்தை சேர்ந்த மனைவி, உணவில் பூண்டு மற்றும் வெங்காயம் இரண்டையும் தவிர்க்கவே, கணவர் குடும்பம் பயன்படுத்தியதால் வீட்டில் பூகம் வெடித்துள்ளது. இதனால் மனைவி குழந்தையுடன் அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.
மன உளைச்சலுக்கு ஆளாகிய கணவர் விவாகரத்து கோரி ஆமதாபாத் குடும்பநல நீதிமன்றத்தில் 2013ல் மனுதாக்கல் செய்தார்.
உணவு பழக்க வழக்கங்களில் மனைவி சமரசம் செய்யவில்லை, இது கொடுமைப்படுத்துவதற்கு சமம் என்று குறிப்பிட்டிருந்ததை விசாரித்த குடும்பநல நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கியதோடு, மனைவிக்கு ஜீவனாம்சம் வாழங்கவும் கணவருக்கு உத்திரவிட்டது.

இதனைதொடர்ந்து குடும்பநல நீதிமன்றம் விதித்த ஜீவனாம்ச தொகை பத்தாது என்று கூறி மேல்முறையீடு செய்துள்ளார் மனைவி. அவர் பூண்டு, வெங்காயம் இல்லாமல் சமைத்தும் வேண்டுமென்றே பிரச்சனை செய்தார் என்று கணவர் கூறியிருக்கிறார்.
இதனையடுத்து மனைவியின் மனுவை தள்ளுபடி செய்து அவருக்கு இடியை இறக்கியது உயர் நீதிமன்றம்.