திரிஷா என் மனைவின்னு சொல்லித்திரிந்த சூர்யா.. வெச்சு செய்த பிரபலம்..
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா பொன்னியின் செல்வன், லியோ படத்திற்கு பின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தன்னுடைய மார்க்கெட்டை ஏற்றிய திரிஷா பற்றி சிலர் சர்ச்சையாக பேசி அதிர்ச்சி கொடுத்து வந்தனர். மன்சூர் அலிகான், ஏவி ராஜ் உள்ளிட்ட சிலர் திரிஷாவை பற்றி கொச்சையாக பேசி வந்தனர். அதை கண்டித்து நடிகை திரிஷா வழக்கும் தொடுத்திருக்கிறார்.
இதற்கு முன் திரிஷா என் மனைவி என்று கூறி பேட்டியளித்து வரும் ஆன்மீகவாதி ஏ எல் சூர்யா, மீண்டும் திரிஷா பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். சமீபத்தில் பிரபல யூடியூப் பிராங்க் செய்யும் ஒருவர் ஏ எல் சூர்யாவை பேட்டியெடுத்து வெச்சு செய்திருக்கிறார்.
திரிஷாவை பற்றி உங்களுக்கு என்ன தெரியும், திரிஷாவுக்கு உங்களுக்கு என்ன தொடர்பு என்ற கேள்விக்கு, எடக்குமுடக்காக சிரித்துக்கொண்டு சமாளித்து பதிலளித்திருக்கிறார். திரிஷா விஜய்யை பற்றி பேசியதை அவர் ரசிகர்கள் கால் செய்து மிரட்டினார்கள்.
ஏகப்பட்ட மிரட்டல்கள், தண்ணி அடிச்சிட்டு வீட்டுக்கு வந்துடுவேன்னு சொல்றாங்க. நான் எல்லாத்துக்கும் தயாராக தான் இருக்கிறேன், கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கி இருக்கிறேன். விஜய், அஜித்தை பற்றி பேச என்ன தகுதி வேண்டும், வெங்காயத்தளபதின்னு பேசிட்டேன் என்ன தகுதி வேணும் என்று கூறியிருக்கிறார் ஏ எல் சூர்யா. இதையும் அந்த பிராங்க்ஸ்டர் கலாய்த்தபடி கிண்டலளித்து பதிலடி கொடுத்திருக்கிறார்.
மேலும், அஜித்துடன் நடிக்கட்டும் அவருடன் படுத்து உருளட்டும் என்று கூறியது மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. திரிஷா என் மனைவின்னு சொல்லி இருக்கிறேன், சொல்லவில்லை என்று கூறவில்லை என்று கடுமையாக கோபட்ட ஏ எல் சூர்யாவை கிண்டல் அடித்தபடி கலாய்த்திருக்கிறார் அந்த யூடியூப் பிராங்க்ஸ்டர்.
பொறுப்பு துறப்பு : குறித்த வீடியோவில் அவர் பேசியதை தான் விடுப்பு தளத்தில் கூறியிருக்கிறோமே தவிர, அதற்கும் விடுப்பு தளத்திற்கு எந்த தொடர்பும் இல்லை.