அவர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை!! சரியான பதிலடி கொடுத்த இசைப்புயல்..
A R Rahman
Cinema Update
Cinema News
By Edward
ஏ ஆர் ரஹ்மான்
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளருமான இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ஸ்லம்டாக் மில்லியனர் உங்களின் மிகச்சிறந்த படைப்பா என்ற கேள்வியை எழுப்பியவருக்கு சரியான பதிலடியை கொடுத்திருக்கிறார்.

அதில், நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள், அது நிச்சயமாக என்னுடைய சிறந்த படைப்புதான். ஹாலிவுட் சூழலில் நான் உருவாக்கிய அந்த ஒலிக்காட்சி, அதற்கு முன் அங்கு இருந்ததில்லை. மேற்கத்திய நாடுகள் அது ஒரு புதிய மற்றும் அற்புதமான அனுபவமாக இருந்த்து.
உலகத்தரம் வாய்ந்த இசையை கேட்டுப்பழகிய அந்த ஆஸ்கர் உறுப்பினர்கள், ஒரு படைப்பிற்கு வாக்களிக்கிறார்கள் என்றால் அவர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என்று சரியான பதிலடியை கொடுத்திருக்கிறார் ஏ ஆர் ரஹ்மான்.