ஏ ஆர் ரகுமான் இன்னும் இப்படி இருக்க இளையராஜா விட்டுக்கொடுத்தது தானாம்.. எந்த படம் தெரியுமா?

Roja Ilaiyaraja Arrahman Isaignani
By Edward Oct 23, 2021 07:22 AM GMT
Report

தமிழ் திரையிலகில் இசை ஜாம்பவனாக எம் எஸ் விஸ்வனதருக்கு அடுத்து இருப்பவர் இசை ஞானி  இளையராஜா தான். இன்னும் இளைஞர்கள் மத்தியில் எப்போதும் இருப்பது அவர்க்குரலும் இசையும் தான். அவருக்கு அடுத்து இருப்பது ஏ ஆர் ரஹ்மான். இருவரும் 80,90 களில் ரசிக்க வைக்கும் படங்களை கொடுத்தனர். அப்போது இளையராஜாவுக்கு மணிரத்னம் எப்படியோ தற்போது ரகுமான் அப்படி ஆகிவிட்டார்.

ஒருமுறை இளையராஜா மற்றும் மணிரத்னம் ஆகிய இருவருக்கும் கருத்து வேறுபாடு வர உங்களுடைய சிஷ்யனை வைத்து நான் இசை அமைத்துக் கொள்கிறேன் என ஏ ஆர் ரகுமானை கையோடு கூட்டிக் கொண்டு சென்றாராம் மணிரத்தினம். ஏ ஆர் ரகுமான் மற்றும் மணிரத்தினம் கூட்டணியில் வந்த முதல் படமான ரோஜா. அதில் இருந்து இன்று வரை மணிரத்னம் ரகுமானை விடவில்லை.

இதையடுத்து, இளையராஜாவிடம் சென்று நிறைய பேர், போற போக்கை பார்த்தால் அந்த பையன் உங்களை விட வளர்ந்து விடுவான் போல என எவ்வளவோ அவரை உசுப்பேற்றி ஏ ஆர் ரகுமானின் கேரியரை காலி செய்ய பல வேலை பார்த்தனர்.

ஆனால் இளையராஜா போ அவனுக்கு திறமை இருந்தால் அவன் நீண்ட காலம் சினிமாவில் இருப்பான் அதை யாராலும் தடுக்க முடியாது எனக்கூறி தன்னிடம் புறம் பேசியவர்கள் அனைவருக்கும் பதிலடி கொடுத்து விட்டாராம்.