முதல் மனைவி இருக்கும்போதே வேறொரு பெண்ணுடன் உறவு!! அமீர் கானின் உண்மை முகம்..
அமீர் கான்
பாலிவுட் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் அதிக சொத்து மதிப்பு வைத்துள்ள நடிகராகவும் திகழ்ந்து வருகிறார் நடிகை அமீர் கான். முதல் மனைவியுடன் இருந்த போதே வேறொரு பெண்ணுடன் ரகசிய உறவில் இருந்ததாக அவரது சகோதரர் ஃபைசல் கான் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமீர் கான் மற்றும் ஃபைசல் கான் இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு விரிசல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் ஃபைசல் கான் அளித்த பேட்டியில், தன் குடும்பத்தை விட்டு பிரிந்து இருப்பதற்கான காரணம் என்ன என்று கூறியிருக்கிறார்.
வேறொரு பெண்ணுடன் உறவு
ரீனா தத்தாவுடன் திருமண வாழ்வில் இருந்தபோது அமீர் கான், பத்திரிக்கையாளர் ஜெசிகா ஹைன்ஸ் என்பவரது உறவில் இருந்தார். பின் ரீனாவை அமீர் கான் விவாகரத்து செய்ததாகவும், கிரண் ராவை பின் திருமணம் செய்துகொண்டதாகவும் ஃபைசல் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது குடும்பத்தினர் ஒருவரையே தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தியதாகவும் திருமணம் செய்ய தாம் தயாராக இல்லாததால் தன்னை மனநலம் சரியில்லாதவர் என்று தன் குடும்பத்தினர் கூறியதாகவும் ஃபைசல் கான் தெரிவித்துள்ளார்.
தன்னை பைத்தியம் என்று சொன்னதோடு, தனக்கு கட்டாயப்படுத்தி சிகிச்சையும் கொடுத்ததாகவும், அமீர் கான் தன்னை ஒரு வருடம் வீட்டிற்குள் அடைத்து வைத்திருந்ததாகவும் தனது குடும்பத்துடனான உறவை துண்டித்துக் கொள்வதாக அறிவித்த ஃபைசல் கான் சொத்தில் எந்த பங்கையும் கேட்கப்போவதில்லை என்றும் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.