60 வயசுல 3வது காதலியை அறிமுகம் செய்த அமீர்கான்!! 6 வயசுல குழந்தை இருக்காம்..
அமீர்கான்
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராகவும் அதிக சொத்து வைத்திருக்கும் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அமீர்கான். சூப்பர் ஸ்டார் ரஜினிகந்தின் கூலி படத்தில் நடித்து வரும் அமீர்கான் மார்ச் 14 ஆம் தேதி தன்னுடைய 60வது வயதை எட்டியுள்ளார் அமீர்கான்.
முன்னணி நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான் உள்ளிட்ட பலர் அமீர்கானின் பிறந்தநாளுக்கு முந்தின இரவு பார்ட்டியில் கலந்து கொண்டனர்.
ஏற்கனவே ரீனா தத்தா, கிரண் ராவ் போன்றவர்களை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார் அமீர்கான்.
அதன்பின் சில வருடங்களாக தங்கல் படத்தில் நடித்த சனா ஷேக் என்பவருடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. அவரை தொடர்ந்து 18 மாதங்களாக வேறொரு பெண்ணுடன் லிவ்விங் வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக செய்திகள் கசிந்தது.
3வது காதலி
இந்நிலையில், தன்னுடைய 60வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பத்திரிக்கையாளர்கள் மத்தியில் மூன்றாவது காதலியை அறிமுகப்படுத்தியிருக்கிறார் நடிகர் அமீர்கான். அமீர்கானின் தயாரிப்பு நிறுவனத்தில் கெளரி என்பவர் பணியாற்றியிருக்கிறார்.
கடந்த 25 ஆண்டுகளாக இருவரும் நண்பர்களாக இருந்து வந்த நிலையில், கெளரியை காதலியாக அறிமுகப்படுத்திர்யிருக்கிறார் அமீர்கான். கெளரிக்கு 6 வயதில் மகன் இருப்பதாகவும் இருவருக்கும் வயது வித்தியாசம் குறித்த தகவல் வெளியாகவில்லை என்றும் செய்திகள் கசிந்துள்ளது.
இதற்கு பாலிவுட்டில் பலரும் அமீர்கானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களும் காதலியை அறிமுகப்படுத்திய விஷயத்திற்காகவும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
