சேரன்லாம் ஒரு மூஞ்சியா..அந்த மூஞ்சிய பாக்கணுமா!! இயக்குநர் சேரனின் ஆதங்கம்..
ஆட்டோகிராஃப்
இயக்குநர் சேரன் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் படமாக மாறியது ஆட்டோகிராஃப் படம். தற்போது பல ஆண்டுகள் கழித்து ரீரிலீஸ் செய்யப்படவுள்ளது. இப்படம் உருவான விதம் குறித்து சேரன் அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

அதில், ஆட்டோகிராஃப் படத்தின் கதை விஜய், சூர்யா, விக்ரம் என பல நடிகர்களிடம் சொல்லப்பட்டது, படத்தில் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என அவர்களில் பலர் வருத்தப்பட்டார்கள்.
கமர்ஷியல் பாடல்கள், சண்டைக்காட்சிகள் இல்லாமல் எதார்தமான படமாக ஆட்டோகிராஃப் வெற்றிப்பெற்றது ஆச்சரியமாக இருந்தது. காரணம், மக்களின் வாழ்க்கைக்கு நெருக்கமான சம்பவங்கள் படத்தில் இருந்ததே 70 சதவீத மக்கள் நினைத்தவர்களுடன் வாழ்வதில்லை என்ற நிதர்சனம் படத்தில் இருந்ததுதான் படத்தின் வெற்றிக்குக் காரணம்.
சேரன்லாம் ஒரு மூஞ்சியா
ஆரம்பத்தில் தான் நடிக்க வேண்டாம் என்று பலர் கூறினர். சேரன்லாம் ஒரு மூஞ்சியா அந்த மூஞ்சி எல்லாம் பார்க்கணுமா என்று விமர்சித்தவர்களும் உண்டு. ஆனால் கதையின் மீது இருந்த நம்பிக்கையால் நடித்தேன்.
செந்திலாகவே வாழ்ந்தால், ரசிகர்கள் அவரைத் தங்களின் ஒருவராகவே பார்த்தனர். காதல் தோல்வியின் வலியையும், அந்தப் பைத்தியக்காரத்தனத்தையும் வெளிக்காட்டவே சிகரெட்டை நெஞ்சில் சுடும் காட்சி வைத்தேன்.
அந்தக்காட்சியின் மூலம், தோல்வியை கடந்து வாழ முடியும் என்ற நம்பிக்கையை தெரிவிக்கவே முயற்சி செய்தேன் என்று சேரன் தெரிவித்துள்ளார். சில காட்சிகளுக்கு பல லட்சங்கள் செலவழித்தும், கிட்டத்தட்ட 4 கோடி ரூபாய் வரை கடன் ஏற்பட்டதாகவும் சேரன் தெரிவித்துள்ளார்.