2000 கோடி சொத்து.. ஆனாலும் காரில் செல்லாமல் பேருந்தில் செல்லும் முன்னணி நடிகரின் மகன்

Bollywood Aamir Khan
By Kathick Jul 05, 2025 02:30 AM GMT
Report

சினிமா துறையில் பல கோடி சொத்துக்கு அதிபதியாக இருக்கும் முன்னணி நட்சத்திரங்களின் வாரிசுகளுக்கு எப்படிப்பட்ட பிரம்மாண்ட வாழ்க்கை இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். பிரம்மாண்ட வீடு, சொகுசு கார்கள், விமான பயணம், நண்பர்களுடன் ஜோலி ட்ரிப் என்றுதான் இருப்பார்கள்.

2000 கோடி சொத்து.. ஆனாலும் காரில் செல்லாமல் பேருந்தில் செல்லும் முன்னணி நடிகரின் மகன் | Aamir Khan Son Junaid Khan Travels In Bus And Auto

ஆனால், ரூ. 2000 கோடி சொத்து சேர்த்து வைத்திருக்கும் முன்னணி நடிகரின் மகன், தங்களது சொகுசு கார்களை கூட பயன்படுத்தாமல் அரசு பேருந்தில் பயணம் செய்து வருகிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா.

2000 கோடி சொத்து.. ஆனாலும் காரில் செல்லாமல் பேருந்தில் செல்லும் முன்னணி நடிகரின் மகன் | Aamir Khan Son Junaid Khan Travels In Bus And Auto

அவர் வேறு யாருமில்லை நடிகர் அமீர் கானின் மகன் ஜுனைத் கான்தான். அவர் ஏற்கனவே ஹீரோவாக பாலிவுட் சினிமாவில் இரண்டு படங்கள் நடித்துள்ளார். இருப்பினும் அவர் கார் எதுவும் பயன்படுத்தாமல் ஆட்டோ ரிச்சா மற்றும் பேருந்தில்தான் செல்கிறாராம்.

2000 கோடி சொத்து.. ஆனாலும் காரில் செல்லாமல் பேருந்தில் செல்லும் முன்னணி நடிகரின் மகன் | Aamir Khan Son Junaid Khan Travels In Bus And Auto

இதுகுறித்து அமீர் கான் பேசியபோது, "என் மகன் இன்னும் கார் கூட வாங்கவில்லை என்பது அதிர்ச்சியாக இருக்கும். பொது போக்குவரத்தை தான் பயன்படுத்துகிறான். கார் வாங்கிக்கொள் என சொல்லி சொல்லி அலுத்துவிட்டது. விமானத்தில் போக சொன்னால் வேண்டாம் என சொல்லவிட்டு ஸ்லீப்பர் பஸ்சில் போகிறான்" என கூறியுள்ளார். ரூ. 2000 கோடி சொத்து வைத்திருக்கும் மாபெரும் நடிகருக்கு இப்படி ஒரு மகனா என பலரும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்..