ராதிகா நடிப்பில் வெளிவந்த தாய் கிழவி படம் இதுவரை செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் விவரம்
Sivakarthikeyan
Radhika Sarathkumar
Box office
Thaai Kizhavi
By Kathick
தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருபவர் ராதிகா சரத்குமார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் தாய் கிழவி.
இப்படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியிருந்தார். முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளார்.

மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரிக்க நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருந்தார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு முதல் நாளில் இருந்தே நல்ல வசூல் கிடைத்தது.
இந்த நிலையில், இதுவரை தாய் கிழவி படம் உலகளவில் ரூ. 60 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக வெளியாகியுள்ளது.