பெண்களைத்தான் சமூகம் குறை சொல்வதில் வேகமாக இருக்கிறது!! ஆர்த்தி ரவி போட்ட பதிவு..
நடிகர் ரவி மோகன் கடந்த ஆண்டு தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கூறிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பேசுபொருளானது.
இதனையடுத்து, ரவி மோகன் தன்னுடை தோழியான கெனிஷாவுடம் இணைந்து கோவாவில் 40 லட்சம் மதிப்பிளான நிலத்தை, தனக்கு திருமணமாகவில்லை என்று குறிப்பிட்டு வாங்கியிருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, ஆர்த்தி ரவி எமோஷனலான ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.

ஆர்த்தி ரவி
அதில், யார் யாருக்கு துரோகம் செய்தார்கள், கணவரா இல்லை மனைவியா என்பது முக்கியமில்லை. இரண்டு பேரின் பக்கமும் இருக்கும் கதையை கேட்காமல் உண்மையை அறிய முடியாது. அதெல்லாம் வேண்டும். ஆனால் பெண்களைத்தான் சமூகம் குறை சொல்வதில் வேகமாக இருக்கிறது.
என்ன நடந்தாலும், யாருடைய தவறாகவே இருந்தாலும் குற்றசாட்டு பெண்களை நோக்கித்தான் வரும். பெண்ணாக இருப்பது கடினம், அதிலும் அம்மாவாக இருப்பது இன்னும் பெரிய பொறுப்பு, வலி, இவை எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் சுமப்பது எளிதானது இல்லை. அதை எல்லோரும் புரிந்து கொள்ளவும் முடியாது.
எனவே தீர்ப்புக்கு பதில் கருணையை தேர்வு செய்யலாம். உங்களுக்கு இன்னும் அதிகமான மனவலிமை கிடைக்கட்டும் ஆர்த்தி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.