பெரிசாகிட்டா விட்டுவிடுவாங்க..என் மகன் அப்படி இல்லை!! ஆர்த்தி ரவி போஸ்..

Birthday Aarti Ravi
By Jai Jun 30, 2026 08:15 AM GMT
Report

ஆர்த்தி ரவி

ரவி மோகனை பிரிந்து தற்போது தன்னுடைய 2 மகன்களுடன் வசித்து வரும் ஆர்த்தி ரசி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய மகன் ஆரவ் 16வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.

பெரிசாகிட்டா விட்டுவிடுவாங்க..என் மகன் அப்படி இல்லை!! ஆர்த்தி ரவி போஸ்.. | Aarti Ravi Son Aarav Turns 16 Years Old Post Viral

கடந்த ஆண்டு ரவி மோகன், விவாகரத்து கேட்டு மனு அளித்தது முதல், பிரஸ் மீட் கொடுத்தது வரை பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இதுகுறித்து ஆர்த்தி ரவி தன்னுடைய மறைமுகமான தாக்குதல்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

அவர் பதிவிட்ட பதிவில், அமைதியாகவும், பொறுமையாகவும் வளர்ந்துள்ள நல்ல பையன் ஆரவ். பசங்க பெரிதாக, ஆனால் விட்டுச்சென்று விடுவார்கள். பேச்சை கேட்கமாட்டார்கள் என்றும் சொல்வார்கள். ஆனால் என் மகன் அப்படி இல்லை என்று சர்ட்டிஃபிகேட் கொடுத்துள்ளார்.