இதயம் முரளி வெளியாவதில் சிக்கலா? இயக்குநர் சுதா கொங்கரா கொடுத்த ஸ்விஸ்ட்..
Sudha Kongara
Parasakthi
By Jai
இதயம் முரளி
இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், அதர்வா, பகத் பாசில், ப்ரீத்தி முகுந்தன், கயடு லோஹர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வரும் ஜூலை 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள படம் தான் இதயம் முரளி. Dawn Pictures தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு தற்போது ஒரு சிக்கல் வந்துள்ளது.

சுதா கொங்கரா
பராசக்தி படத்தை இயக்கிய சுதா கொங்கரா, பராசக்தி படத்தின் சம்பள பாக்கியான ரூ. 8.39 கோடியை வழங்கும் வரை இதயம் முரளி படத்தை வெளியிட தடை விதிக்குமாறு டாக் பிச்சர்ஸ் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார்.
விசாரணையில் டான் பிச்சர்ஸ் நிறுவனம் ஜூலை 8ஆம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் இதயம் முரளி படம் ஜூலை 10 ஆம் தேதி ரிலீஸாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.