10 ஆயிரம் ரசிகர்கள் முன் நடிகருக்கு சிகரெட் அடிக்க சொன்ன ரஜினிகாந்த்!! ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து தற்போது சூப்பர் ஸ்டார் என்ற பெயரோடு உலக ரசிகர்களை ஈர்த்து வருகிறார் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்றாலே அவரது சிகரெட் பிடிக்கும் ஸ்டைல் தான் அனைவரையும் கவர்ந்த முக்கிய ஒன்றாக இருக்கும்.
ஆனால் சில காலக்கட்டத்தில் ரஜினிகாந்த் ரியல் வாழ்க்கையில் சிகரெட் பிடிப்பதை நிறுத்தியதோடு சமீபகாலமாக படங்களிலும் நடிப்பதை தவிர்த்து விட்டார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தின் வெளியீட்டு வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார்.
ரஜினிகாந்த் பற்றி பல நட்சத்திரங்கள் அவருடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார். அப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி பிரபல நடிகர் அப்பாஸ் சில தகவல்களை கூறியிருக்கிறார்.
எனக்கு பிடித்த நடிகர் என்றால் அது ரஜினி சார். படையப்பா படத்தில் அவுட்டோர் ஷூட்டிங்கில் இருந்தோம். அப்போது எனக்கு ஸ்மோக் பிடிக்க வேண்டும்.
பக்கத்தில் ரஜினிகாந்த் ரசிகர்கள் 10 ஆயிரம் பேர் இருந்தார்கள். சார் பக்கத்தில் இருப்பதால் கொஞ்சம் தள்ளி போய் அடிக்கலாம்னு பார்த்த என்னால் போக முடியாமல் அப்படியே இருந்தேன்.
ரஜினி சார் என்னை பார்த்து என்ன ஆச்சின்னு கேட்டார். நானும் தம் அடிக்கனும்னு சொன்னேன். ஓகே அடிக்கலாம் என்று சொல்லி அவர் பிராண்ட் சிகரெட்டை எனக்கு அவரே பற்ற வைத்து கொடுத்தார் என்று அப்பாஸ் தெரிவித்துள்ளார்.